பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

இந்தியாவில் பல வாரங்களாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த வேளையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வருட உயர்வைத் தொட்ட காரணத்தால் பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வந்தது.

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தப் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனால் புதன்கிழமை விலையிலேயே இன்று பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலர் மதிப்பும் சரி, கச்சா எண்ணெய் விலையும் சரி அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.39 சதவீதம் வரையில் சரிந்து 74.24 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.31 சதவீதம் சரிந்து 78.05 டாவருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் வரையில் உயர்ந்தது.

இந்திய மக்கள்

இந்திய மக்கள்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் அதே விலையில் இருப்பது மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், உயராமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை


சென்னை - 99.15 ரூபாய்
டெல்லி - 101.39 ரூபாய்
கொல்கத்தா - 101.87 ரூபாய்
மும்பை - 107.47 ரூபாய்
பெங்களூர் - 104.92 ரூபாய்
ஹைதராபாத் - 105.48 ரூபாய்
கோழிக்கோடு - 101.86 ரூபாய்

டீசல் விலை

டீசல் விலை

சென்னை - 94.17 ரூபாய்
டெல்லி - 89.57 ரூபாய்
கொல்கத்தா - 92.67 ரூபாய்
மும்பை - 97.21 ரூபாய்
பெங்களூர் - 95.06 ரூபாய்
ஹைதராபாத் - 97.74 ரூபாய்
கோழிக்கோடு - 94.76 ரூபாய்

OPEC கணிப்பு

OPEC கணிப்பு

உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் தேவை அடுத்தச் சில மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயரும் என OPEC தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. 2023க்கு கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளுக்கு 1.7 மில்லியன் பேரல் அதிகரித்து 101.6 மில்லியன் பேரல் ஆக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலீடு

புதிய முதலீடு

இதேபோல் உலக நாடுகளில் zero emissions இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகப் புதிய கச்சா எண்ணெய் திட்டத்திற்கு முதலீடு செய்யக்கூடாது என முடிவு எடுத்துள்ளது. இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை பெரிய அளவில் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+