புத்தாண்டு தினத்தில் வர்த்தகச் சிலிண்டர் விலை குறைந்தது நாடுமுழுவதும் பேசப்பட்டது மறக்க முடியாது, ஒருபக்கம் வெறும் 1 ரூபாய், 50 பைசா என மிகச் சொற்பமாகக் குறைந்ததைப் பலர் விமர்சனம் செய்தாலும் ஒரு சிலர் அரசுக்குக் கிடைத்த விலை வித்தியாச பலனை மக்களுக்குக் கொடுத்துள்ளது எனப் பாராட்டினர்.
இதன் இதற்குப் பின்பு வந்த தகவல் தான் சொற்பமான சிலிண்டர் விலை குறைப்பை மறைத்தது. அடுத்த சில மாதத்தில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் மத்தியில் மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் மூலம் பெறப்பட்ட பலன் வாயிலாகப் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரையில் குறைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதை அப்போதே பலரும் நம்பத் தாயாராக இல்லை எனச் சமூகவலைத்தளத்தில் பேசினாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் பல மாதங்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஓரே விலையில் விற்கப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையவாய்ப்பு உள்ளதாக நம்பினர். ஆனால் இந்த நம்பிக்கையை உடைத்தார் பெட்ரோலிய துறை அமைச்சர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி ஜனவரி 3 ஆம் தேதி பேசுகையில் எரிபொருள் விலை குறைப்பது குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடக்கப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் வேளையில் நாடு முழுவதும் எரிபொருள் சப்ளையை உறுதி செய்வதே அரசின் முக்கிய இலக்காகத் தற்போது உள்ளது எனத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் கடைசியில் 80 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது பெரிய அளவில் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் டிமாண்ட் குறைந்துள்ளது என்பது பொருளாதார மந்தநிலையை உணர்த்துகிறது. கச்சா எண்ணெய் விலையில் அதீத தடுமாற்றம் இருக்கும் காலமாக மாறியுள்ளது. இதனிடையில் மத்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் விலை குறைப்புக்கான எவ்விதமான ஆலோசனையும் செய்யவில்லை எனப் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து வெளியான வதந்திக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான பார்த் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஏப்ரல் 2022ல் இருந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications