இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் சுத்திகரிப்புச் செலவுகள் எனப் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையைத் தொடர்ந்து புதன்கிழமையும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 முதல் 30 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 24 - 29 பைசா வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று ரீடைல் சந்தை நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.30 ரூபாயில் இருந்த 87.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் டீசல் விலை 77.48 ரூபாயில் இருந்து 77.73 ரூபாயாக உயர்ந்துள்ளது
இதைத்தொடர்ந்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.12 ரூபாயாகவும், டீசல் 84.63 ரூபாயும், கொல்கத்தாவில் பெட்ரோல் 88.92 ரூபாயும், டீசல் 81.31 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் 89.26 ரூபாயாகவும், டீசல் 82.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications