டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்கு நாட்களாக விலை வீழ்ச்சி கண்டு கொண்டு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்தில் இருமுறை மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் செயல்முறை நடைமுறையில் இருந்தது.
அது சர்வதேச அளவில் விறபனையாகும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாற்றம் செய்யும் முறை இருந்து வந்தது.
விலை நிர்ணயம்
ஆனால் இது பின்னர் அனுதினமும் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது. மேலும் இந்த எண்ணெய் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்களின் கையில் வந்தது. இந்த முறையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அதிரடியான மாற்றங்களை கண்டு வந்தது. அந்த வகையில் கடந்த நான்கு தினங்களாகவே விலை குறைந்து வருகிறது.
சென்னையில் விலை வீழ்ச்சி
குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அனுதினமும் விலை அதிகளவில் குறையவில்லை என்றாலும் தினசரி குறைந்தபட்சம் 10 பைசாவாவது குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் விலை
குறிப்பாக கடந்த செப்டம்பர் 12, 2019ல் தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை 71 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதே டீசல் விலையானது ஜனவரி 12 முதல் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதன் எதிரொலியாக இங்கு எரிபொருள் சந்தையிலும் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்று விலை இப்படி தான்
இந்த நிலையில் இந்தியன் ஆயில் இணையத்தின் மூலம் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முறையே ரூ.70.83, ரூ.73.51, ரூ.76.5, ரூ.73.58 ஆக உள்ளது. இதே டீசல் விலையானது முறையே ரூ.63.51, ரூ.65.84, ரூ.66.50, ரூ.67.10 ஆகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
இது நல்ல விஷயம் தானே
பலவேறு நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா பயத்தினால் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எது எப்படியோங்க இது வாகன ஓட்டிகளுக்கு நல்ல விஷயமே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications