கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையப்போவது இல்லை என்பது தான் மக்களைத் தற்போது அதிகளவில் பாதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 முதல் 3 டாலர் வரையில் குறைந்துள்ள வேளையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான குறைப்பும் இல்லாமல் தொடர்ந்து விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி பெரும் சுமையாக மாறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவில் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் மத்திய அரசின் மானியம் இல்லாமல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் காரணத்தால் தினமும் விலையை உயர்த்தி வருகிறது.
கச்சா எண்ணெய்
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் WTI கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 முதல் 3 டாலர் வரையில் குறைந்துள்ளது. ஆயினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.
பெரும் சரிவு
அக்டோபர் 26ஆம் தேதி ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் 84.65 டாலராக இருந்த நிலையில் இன்று 82.74 டாலராகச் சரிந்துள்ளது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 85.65 டாலரில் இருந்து 84.34 டாலராகச் சரிந்துள்ளது. இதேபோல் OPEC கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை.
35 பைசா அதிகரிப்பு
3வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டருக்குச் சராசரியாக 35 பைசா அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
பெட்ரோல் விலை (Oct 29)
சென்னை - 105.43 ரூபாய், டெல்லி - 108.64 ரூபாய், கொல்கத்தா - 109.12 ரூபாய், மும்பை - 114.47 ரூபாய், பெங்களூர் - 112.43 ரூபாய், ஹைதராபாத் - 113.00 ரூபாய், கோழிக்கோடு - 109.12 ரூபாய், போபால் - 117.35 ரூபாய், இந்தூர்- 117.38 ரூபாய்.
டீசல் விலை (Oct 29)
சென்னை - 101.59 ரூபாய், டெல்லி - 97.37 ரூபாய், கொல்கத்தா - 100.49 ரூபாய், மும்பை - 105.49 ரூபாய், பெங்களூர் - 103.35 ரூபாய், ஹைதராபாத் - 106.22 ரூபாய், கோழிக்கோடு - 102.98 ரூபாய்.


Click it and Unblock the Notifications