16-வது நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..!

உணவு, உடை, இருப்பிடம் இதற்கு அடுத்தாற்போல் இன்று அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பது பெட்ரோல் டீசல் தான்.

அந்த காலத்தில் எல்லாம் மக்கள் தூரமாக செல்ல வேண்டுமானால் மாட்டுவண்டி பயணம், நடை பயணமாகவே சென்றனர். ஆனால் அதன் பேருந்து, இருசக்கர வாகனம், கார், ரயில், விமானம் என பல போக்குவரத்து சாதனங்கள் வந்துள்ளது.

ஆனால் இன்றோ சிறியவர்கள் முதல் பெரியோர் வரையில், அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, இருசக்கர வாகனங்களை எடுத்து செல்கிறோம். அந்தளவும் வாகன வசதிகள் நம்மை சோம்பேறிகளாக்கி விட்டன.

அடிப்படை தேவையாக மாறியுள்ள எரிபொருள்

அடிப்படை தேவையாக மாறியுள்ள எரிபொருள்

ஆக இப்படியாக நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பெட்ரோல் டீசல் தேவையானது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வரும் நிலையில், அதன் விலையானது தொடர்ந்து உச்சானிக் கொம்பை தொட்டு வருகிறது. இந்த நிலையில் 16 வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து உள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம்

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. ஆனால் இது தற்போது சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக தினசரி விலை ஏற்றம் கண்டு வருகிறது.

சென்னையில் விலை நிலவரம்

சென்னையில் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 82.87 ரூபாயாக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 76.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு


கடந்த மாதத்தில் கொரோனாவின் காரணமாக முடங்கி போன சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்றது. எனினும் தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணத்தால் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

மேலும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியும் குறைக்கப்பட்டது. இது விலையை அதிகரிக்கும் ஒரு காரணியாக தற்போது மாறியுள்ளது. ஏனெனில் கச்சா எண்ணெய் தேவையாக அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், உற்பத்தியானது குறைக்கப்பட்டுள்ளது. ஆக இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

எவ்வளவு அதிகரிப்பு

எவ்வளவு அதிகரிப்பு

எரிபொருள்களின் விலையானது தொடர்ந்து 16 நாளாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையானது 16 நாட்களில் ஒரு லிட்டருக்கு 8.30 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது 9.22 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஆக போகிற போக்கில் சதம் அடிக்காமல் விடாது போல் இருக்கே.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம்

டெல்லியில் பெட்ரோல் விலையானது 33 பைசா அதிகரித்து 79.56 ரூபாயாகவும், டீசல் விலையானது 58 பைசா அதிகரித்து, 78.85 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே கொல்கத்தாவில் பெட்ரோல் விலையானது 81.27 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.14 ரூபாயாகவும் உள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலையானது 81.32 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.70 ரூபாயாகவும் உள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலையானது 82.87 ரூபாயாகவும், டீசல் விலையானது 76.30 ரூபாயாகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+