டெல்லி: கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு சரிந்த போதும் கூட, பெட்ரோல் டீசல் விலையில் பெரியதொரு மாற்றமில்லை. அப்படி இருக்கையில் சில நாடுகளில் கொரோனா லாக்டவுனில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாளுக்கு நாள் எரிபொருள் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் சமீப நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கச்சா எண்ணெய் விலையானது சற்று குறைந்திருந்தாலும், இங்கு பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அதிகரித்து வருகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 46 பைசாகவும், டீசல் விலை 59 பைசாவும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு
ஜூன் 7-லிருந்து ஏற்றம் காண ஆரம்பித்த நிலையில், தற்போது வரையில் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. 82 நாள் லாக்டவுனுக்கு பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.98 ரூபாயும், இதே டீசல் விலை லிட்டருக்கு 5.23 ரூபாயும் அதிகரித்துள்ளது.
எந்த நகரத்தில் என்ன விலை
டெல்லியில் பெட்ரோல் விலை 76.26 ரூபாய், டீசல் 74.62 ரூபாய்.
மும்பையில் பெட்ரோல் விலை 83.17 ரூபாய், டீசல் 73.21 ரூபாய்.
ஹைதராபாத் பெட்ரோல் விலை 79.17 ரூபாய், டீசல் 72.93 ரூபாய்.
சென்னையில் பெட்ரோல் விலை 79.96 ரூபாய், டீசல் 72.69 ரூபாய்.
பெங்களூருவில் பெட்ரோல் விலை 78.73 ரூபாய், டீசல் 70.95 ரூபாய்..
வரி அதிகரிப்பு
இந்த பெட்ரோல் டீசல் விலைகள் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் விலையானது மிக உயர்ந்த அளவில் காணப்பட்டன. இந்தியாவில் வாகன எரிபொருள் விகிதங்களின் தற்போதைய அதிகரிப்பு, கலால் வரி உயர்வு, பெட்ரோலுக்கு லிட்டருக்கும் 10 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. இது தவிர பல மாநிலங்களில் அரசாங்கங்களும், எரிபொருள் மீதான வாட் அல்லது செஸ் வரியினை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும்
அதனால் இதன் தாக்கமும் தற்போது பெட்ரோல் டீசல் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சில அறிக்கைகளின் படி, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அடுத்த சில நாட்களுக்கு எரிபொருள் விகிதங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக அடுத்து வரும் நாட்களுக்கு இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications