இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தைக்குப் பெட்ரோல், டீசல் விலை பெரும் சுமையாக உள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை இன்றைய உயர்வு
ஒரு நாள் இடைவேளையில் இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் விலை 22 முதல் 25 பைசா வரையிலும், டீசல் விலை 12 முதல் 14 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
மும்பையில் புதிய உச்சம்
இன்றைய விலை உயர்வின் மூலம் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.82 ரூபாய் அளவிற்கு உயர்ந்து வரலாற்று உச்சத்தைப் பெற்றுள்ளது. மே 29ஆம் தேதி முதல் முறையாக மும்பையில் 100 ரூபாயைக் கடந்துள்ள நிலையில் தற்போது 102.82 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 97.91 ரூபாய்
டெல்லி : 96.66 ரூபாய்
கொல்கத்தா : 96.58 ரூபாய்
மும்பை : 102.82 ரூபாய்
பெங்களூர் : 99.89 ரூபாய்
ஹைதராபாத் : 100.46 ரூபாய்
கோழிக்கோடு : 97.07 ரூபாய்
டீசல் விலை உயர்வு
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 92.04 ரூபாய்
டெல்லி : 87.41 ரூபாய்
கொல்கத்தா : 90.25 ரூபாய்
மும்பை : 94.84 ரூபாய்
பெங்களூர் : 92.66 ரூபாய்
ஹைதராபாத் : 95.28 ரூபாய்
கோழிக்கோடு : 92.42 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இதேவேளையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.87 சதவீதம் உயர்ந்து 72.75 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.96 சதவீதம் வளர்ச்சி அடைந்து 74.70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு
அமெரிக்கா, ஐரோப்பியச் சந்தைகள் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ள வேளையில் இந்நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத காரணத்தால் இதன் விலையில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சாமானிய மக்களுக்குப் பாதிப்பு
பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு எனக் கேட்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான மொத்த விலை பணவீக்கம் சிறந்த உதாரணம். நாட்டின் மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத விதமாக 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவீடு 10.5 சதவீதமாக இருந்தது.
உணவு பணவீக்கம்
எரிபொருள் மற்றும் மின்சாரம் பணவீக்கம் மே மாதத்தில் 37.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் உணவு விலை பணவீக்கமும் 7.58 சதவீதத்தில் இருந்து 8.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications