இன்றைய நிலையில் நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிப் போன பெட்ரோல், டீசல் விலையானது, தொடர்ந்து பல நாட்களாக ஏற்றம் கண்டு வருகின்றது.
முன்பாக மாதம் இரு முறை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையானது ஏற்ற இறக்கம் கண்டது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றத்தினை கொண்டு வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

ஏற்கனவே வரலாறு காணாத புதிய உச்சத்தினை கண்டு வரும் டீசல் விலையானது, தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தெளிவாக சொல்ல வேண்டுமானால் சில இடங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை கடந்த வாரத்தில் அதிகரித்தது.
பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 4 காசுகள் அதிகரித்து, 83.63 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவே டீசல் விலையானது 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 77.72 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏறுமுகமாகவே இந்த எரிபொருள் விலையானது, நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இந்த விலையை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அரசின் வரி விகிதமானது இன்னும் விலையேற்றத்திற்கு வழிவகுத்து வருகின்றது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 80.43 ரூபாயாகும். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 80.53 ரூபாயாகும்.
மும்பையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 87.19 ரூபாயாகும், மற்ற பகுதிகளை விட மும்பையில் தான் மிக அதிகம். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 87.19 ரூபாயாகும்.
இதே சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாயாகும். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 77.72 ரூபாயாகும்.
கொல்கத்தாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.10 ரூபாயாகும். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 75.64 ரூபாயாகும்.
இதே ஹைதரபாத்தில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.49 ரூபாயாகும். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 78.69 ரூபாயாகும்.
பெங்களூருவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.04 ரூபாயாகும். இதே டீசல் விலையானது லிட்டருக்கு 76.58 ரூபாயாகும்.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!



Click it and Unblock the Notifications