12வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. சென்னையில் இன்றைய விலை நிலவரம்..!

இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய வர்த்தகச் சந்தையையும் இயக்கும் எரிபொருள் சந்தையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்துக் கடுமையான எதிர்ப்புகளை மத்திய அரசு எதிர்கொண்டு வரும் நிலையிலும், விலை குறையவில்லை.

இன்று (பிப்ரவரி 20ஆம் தேதி) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள அறிவிப்பின் படி நாட்டு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 38 பைசா, 37 பைசா என்ற அளவில் உயர்ந்துள்ளது.

100 ரூபாயைக் கடந்தது

100 ரூபாயைக் கடந்தது

இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயும், டீசல் 90 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது 37 முதல் 38 பைசா வரையிலான உயர்வு பல மாநிலங்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.58 ரூபாயும், டீசல் 80.97 ரூபாயை அடைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் கடந்த 12 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 3.64 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4.18 ரூபாயும் உயர்ந்துள்ளது, இது தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள உயர்வு மட்டுமே, மும்பையில் இதன் அளவீடு மிகவும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

இன்றைய உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 90.58 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 91.78 ரூபாயாகவும், மும்பையில் 97.00 ரூபாயாகவும், சென்னையில் 92.59 ரூபாயாகவும், பெங்களூரில் 93.61 ரூபாயாகவும், ஹைதராபாத் 93.18 ரூபாயாகவும், பாட்னாவில் 92.61 ரூபாயாகவும், போபால் 98.60 ரூபாயாகவும், ஜெய்ப்பூர் 97.10 ரூபாயாகவும், கூர்கிராமில் 88.54 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை

டீசல் விலை

இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் 80.97 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 84.56 ரூபாயாகவும், மும்பையில் 88.06 ரூபாயாகவும், சென்னையில் 85.98 ரூபாயாகவும், பெங்களூரில் 85.84 ரூபாயாகவும், ஹைதராபாத் 88.31 ரூபாயாகவும், பாட்னாவில் 86.22 ரூபாயாகவும், போபால் 89.23 ரூபாயாகவும், ஜெய்ப்பூர் 89.44 ரூபாயாகவும், கூர்கிராமில் 81.55 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள்

மத்திய, மாநில அரசுகள்

இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல்-ன் விற்பனை விலையில் 61 சதவீதத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியாகப் பெறுகிறது, இதேபோல் டீசல் விற்பனை விலையில் லிட்டருக்கு 56 சதவீத தொகையை வரியாக வசூலிக்கிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+