இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குப் பாதிக்கிறது எனப் பல தரப்புகள் கூறிவரும் நிலையிலும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.
மே 4ஆம் தேதி முதல் சில இடைவேளைகள் மத்தியில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 23 முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலைக்கு லீவ்-விட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 31 பைசாவும், டீசல் விலை 28 பைசாவும் உயர்த்தியுள்ளது.
தலைநகர் டெல்லி
இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95.85 ரூபாய்க்கும், டீசல் 86.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை விலையில் பெரும் பகுதி மத்திய மாநில அரசின் வரிகள் மட்டுமே.
வரி விதிப்பால் மக்களுக்குச் சுமை
30 முதல் 35 ரூபாய்க்குத் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் மக்களின் கைகளுக்கு வரும் போது சுமார் 100 ரூபாய் அளவில் உயர்கிறது. மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி, போக்குவரத்துக் கட்டணம், டீசல் கமிஷன் எனப் பலவற்றை மக்களின் கைகளில் இருந்து பெரும் தொகையை வசூலிக்கப்படுகிறது.
மும்பையில் படு மோசம்
இந்நிலையில் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை நகரத்தில் ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் விலை 102 ரூபாய்க்கும், ப்ரீமியம் பெட்ரோல் 110 முதல் 115 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை இன்றைய விலை உயர்வின் மூலம் 94.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகர் விலை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்தியாவிலேயே அதிகப்படியாக 106.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இங்கு டீசல் விலை 99.80 ரூபாயாக உள்ளது. ஸ்ரீ கங்காநகர் பகுதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் காரணத்தால் போக்குவரத்துக் கட்டணம் அதிகமாகிறது.
பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 97.19 ரூபாய்
டெல்லி : 95.85 ரூபாய்
கொல்கத்தா : 95.80 ரூபாய்
மும்பை : 102.04 ரூபாய்
பெங்களூர் : 99.05 ரூபாய்
ஹைதராபாத் : 99.62 ரூபாய்
கோழிக்கோடு : 96.26 ரூபாய்
டீசல் விலையில் மாற்றமில்லை
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 91.42 ரூபாய்
டெல்லி : 86.75 ரூபாய்
கொல்கத்தா : 89.60 ரூபாய்
மும்பை : 94.15 ரூபாய்
பெங்களூர் : 91.97 ரூபாய்
ஹைதராபாத் : 94.57 ரூபாய்
கோழிக்கோடு : 91.74 ரூபாய்
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications