இந்தியா சமையல் எண்ணெய்க்கும் சரி, கச்சா எண்ணெய்க்கும் சரி வெளிநாட்டு இறக்குமதிகளை அதிகளவில் நம்பியிருக்கும் காரணத்தால் சர்வதேசச் சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் இந்தியச் சந்தையை அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
மலேசியாவில் பாமாயில் உற்பத்தி குறைந்த காரணத்தால் இந்தியாவில் இறக்குமதி அளவு குறைந்த சமையல் எண்ணெய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை 20 முதல் 30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தையும் வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காக உற்பத்தி அளவீடுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை அதிகரித்துள்ளது.
3வது நாளாக உயர்வு
சர்வதேச சந்தையின் எதிரொலி காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது மட்டும் அல்லாமல், சுத்திகரிப்புச் செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
தொடர் உயர்வு
தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு லிட்டர் பெரட்ரோல் விலை கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள், லாரி உரிமையாளர்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
குறிப்பாகக் காய்கறி, உணவுப் பொருட்களின் விலை பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வால் அதிகளவில் அதிகரித்துள்ளது.
விலை என்ன தெரியுமா..?
நவம்பர் 19ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் தமிழ்நாட்டில் சராசரியாக 84.62 ரூபாயாக இருந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதி 84.80 ரூபாயாகவும், நவம்பர் 21ஆம் தேதி 84.95 ரூபாயாகவும், நவம்பர் 19ஆம் தேதி அதாவது இன்று 85.02 ரூபாயாகவும் உள்ளது.
டீசல்
அதேபோல் ஒரு லிட்டர் டீசல் நவம்பர் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் சராசரியாக 76.43 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 76.67 ரூபாய், 76.87 ரூபாய், 77.05 ரூபாய் என அடுத்தடுத்த நாட்களில் விலை அதிகரித்து வருகிறது.
டீசலின் இந்தத் தொடர் உயர்வால் போக்குவரத்துத் துறை அதிகளவிலான எதிர்கொண்டு வருகிறது.
இந்தியச் சந்தை
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சி தான் முக்கியக் காரணம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications