அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வரும் நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த நாடுகளில் வர்த்தகம், உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது, ஆனால் இதேவேளையில் உற்பத்தி அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.59 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 65.13 டாலருக்கும், பிரிட்டன் நாட்டின் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 68.50 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இதன் விலை 70 டாலரை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
OPEC கச்சா எண்ணெய் விலை
இதேபோல் இந்தியா அதிகம் வாங்கும் OPEC கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி OPEC கச்சா எண்ணெய் ஒரு பேரல் 68 டாலரைத் தாண்டியுள்ளது. குறிப்பாகச் சவுதி கச்சா எண்ணெய் விலை 68.29 டாலர் வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. ஆனால் 6 வாரங்களாகச் செய்யப்படாத விலை உயர்வு தற்போது தொடர்ந்து 4 நாட்களாக அறிவிக்கப்பட்டு வரும் விலை உயர்வு மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள விலை உயர்வின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 பைசா அதிகரித்து 93.15 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 30 பைசா அதிகரித்து 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
முழு லாக்டவுன்
இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முழு லாக்டவுன் அறிவிப்புகள் ஆலோசனை செய்து வருகிறது. முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை பெரிய அளவில் குறையும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையையும் பாதிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை
டீசல் விலை நிலவரம்
சென்னை - 86.65 ரூபாய்
டெல்லி - 81.73 ரூபாய்
கொல்கத்தா - 84.57 ரூபாய்
மும்பை - 88.82 ரூபாய்
பெங்களூர் - 86.64 ரூபாய்
ஹைதராபாத் - 89.11 ரூபாய்
கோழிக்கோடு - 86.45 ரூபாய்
பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை - 93.15 ரூபாய்
டெல்லி - 91.27 ரூபாய்
கொல்கத்தா - 91.41 ரூபாய்
மும்பை - 97.61 ரூபாய்
பெங்களூர் - 94.30 ரூபாய்
ஹைதராபாத் - 94.86 ரூபாய்
கோழிக்கோடு - 91.68 ரூபாய்
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications