இந்தியாவும், இந்திய மக்களுக்கும் கொரோனா 2வது தொற்று அலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அதிக வரி வருமானத்திற்காக எரிபொருள் மீதான வரி அளவீட்டை மத்திய அரசு குறைக்காமல் தொடர்ந்து சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இன்று கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல்
இந்தியாவில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த 2 வாரத்தில் பெட்ரோல் விலை 14 முறையும், டீசல் கடந்த 3 வாரத்தில் 17 முறையும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 முதல் 35 பைசா வரையிலும், டீசல் விலை 33 முதல் 37 பைசா வரையிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதலில் 20 முதல் 25 பைசா வரையில் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது 35 முதல் 40 பைசா வரையில் உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசும், மாநில அரசும்
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி வரி விதித்து வருகிறது. குறிப்பாக மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விற்பனையில் கிடைக்கும் வாட் வரி தான் முக்கிய வருமானமாக உள்ளது. இதனாலேயே பெட்ரோல், டீசல்-ஐ ஜிஎஸ்டி வரி விதிப்புச் செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட மத்திய அரசு அதிகப்படியான வரியை விதித்து வரி வருமானத்தைப் பெற்று வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 15)
சென்னை - 102.40 ரூபாய், டெல்லி - 105.14 ரூபாய், கொல்கத்தா - 105.76 ரூபாய், மும்பை - 110.75 ரூபாய், பெங்களூர் - 108.80 ரூபாய், ஹைதராபாத் - 109.37 ரூபாய், கோழிக்கோடு - 105.61 ரூபாய், போபால் - 113.73 ரூபாய், இந்தூர்- 113.77 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 15)
சென்னை - 98.26 ரூபாய், டெல்லி - 93.87 ரூபாய், கொல்கத்தா - 96.98 ரூபாய், மும்பை - 101.40 ரூபாய், பெங்களூர் - 99.63 ரூபாய், ஹைதராபாத் - 102.42 ரூபாய், கோழிக்கோடு - 99.29 ரூபாய்.
கச்சா எண்ணெய் விலை
இன்று சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 0.68 சதவீதம் அதிகரித்து 81.86 டாலராக உயர்ந்துள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.75 சதவீதம் அதிகரித்து 84.63 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோலத் தான் OPEC கச்சா எண்ணெய் விலையும்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications