மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு.. சென்னையில் 100-ஐ நெருங்கி வரலாற்று உச்சத்தைத் தொட்டது..!

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பல்வேறு காரணங்களுக்காக இதன் விலை கணிசமாகக் குறைந்துள்ள வேளையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது, ஆனால் அதன் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.

ஒருபக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து வரும் மத்திய அரசு, மறுபக்கம் வர்த்தகச் சந்தை பாதிக்கும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கொரோனா தொற்று நிறைந்த இந்தக் காலகட்டத்திலும் கச்சா எண்ணெய் விலை 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஈரான் நாட்டுடன் உலக நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையிலும், OPEC+ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடக்க உள்ளது.

OPEC+ நாடுகள் பேச்சுவார்த்தை

OPEC+ நாடுகள் பேச்சுவார்த்தை

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தாண்டி உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் OPEC+ நாடுகள் இந்த வாரம் நடத்தும் கூட்டத்தில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது குறித்து முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

இதன் வாயிலாகச் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.44 சதவீதம் குறைந்து 72.59 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.47 சதவீதம் சரிந்து 74.33 டாலராகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை குறைந்துள்ள போதும் இந்தியாவில் எரிபொருள் விலை குறையவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 முதல் 35 பைசாவும், டீசல் விலை 26 முதல் 30 பைசா வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மிக அருகில் வந்துள்ளது.

பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்

சென்னை : 99.80 ரூபாய்
டெல்லி : 98.81 ரூபாய்
கொல்கத்தா : 98.64 ரூபாய்
மும்பை : 104.90 ரூபாய்
பெங்களூர் : 102.11 ரூபாய்
ஹைதராபாத் : 102.69 ரூபாய்
கோழிக்கோடு : 99.22 ரூபாய்

டீசல் விலை நிலவரம்

டீசல் விலை நிலவரம்

இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்

சென்னை : 93.72 ரூபாய்
டெல்லி : 89.18 ரூபாய்
கொல்கத்தா : 92.03 ரூபாய்
மும்பை : 96.72 ரூபாய்
பெங்களூர் : 94.54 ரூபாய்
ஹைதராபாத் : 97.20 ரூபாய்
கோழிக்கோடு : 94.29 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+