வழக்கம்போல இன்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தினசரி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினை பொறுத்து, இந்தியாவிலும் விலையில் மாற்றம் செய்யப்படும். அந்தவகையில் இன்றோடு தொடர்ச்சியாக 13 ஆவது நாளாக பெட்ரோல் விலையானது அதிகரித்துள்ளது.
இந்த விலையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் மதிப்புகூட்டு வரியும் உள்ளதால், இன்னும் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது.
இங்கு இறக்குமதி அதிகம்
இந்திய மற்ற நாடுகளை கட்டிலும் அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தால், அதன் தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் எரிபொருட்கள் மீதான வரியும் அதிகம்.
உற்பத்தி குறைப்பு
அதோடு கொரோனா காலத்தில் பல நாடுகளிலும் லாக்டவுன் அமல்படுத்திய நிலையில், எரிபொருள் தேவையானது முடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியானது அப்படியே தேங்கியது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் வைக்க இடமில்லாமல் போகலாம் எனறெல்லாம் கூறப்பட்டது. இதனால் ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை குறைத்தன.
உற்பத்தியை குறைக்க திட்டம்
தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுளிலும் தேவை வழக்கம்போல மீண்டு கொண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் விலையை அதிகரிப்பதற்காக, கச்சா எண்ணெய் உற்பத்தியினை குறைக்கவே திட்டமிடுகின்றன. இதனால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது.
இறக்குமதி அதிகம்
தனது மொத்த தேவையில் சுமார் 80% எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவிலும், தற்போதும் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கம்போல தொழில்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. வாகனங்கள், போக்குவரத்துகள் இயங்கி வருகின்றன. இதனால் எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகின்றது.
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல் நிலவரம்
டெல்லி - ரூ.90.58
கொல்கத்தா - ரூ.97.78
மும்பை - ரூ.97
சென்னை - ரூ.92.59
பெங்களுர் - ரூ.93.61
டீசல் நிலவரம்
டெல்லி - ரூ.80.97
கொல்கத்தா - ரூ.84.56
மும்பை - ரூ.88.06
சென்னை - ரூ.85.98
பெங்களுர் - ரூ.85.84
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!



Click it and Unblock the Notifications