உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மிக வேகமெடுத்து பரவி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 4,000 தாண்டியுள்ளது.
இதற்கிடையில் எண்ணெய் நுகர்வானது சற்று குறைந்திருந்தாலும் விலை குறைப்படாக இல்லை. அதிலும் இம்மாதத்தில் 9-வது நாளாக தேர்தல் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
குறிப்பாக பெட்ரோல் விலையானது 24 பைசா அதிகரித்தும், டீசல் விலையானது 27 பைசா அதிகரித்தும் காணப்படுகிறது. சில இடங்களில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினையும் தாண்டியுள்ளது.
ரூ.100 அருகில் விற்பனை
குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் சில நகரங்களில் 100ஐ தாண்டியுள்ளது, மும்பையில் கூட கிட்டதட்ட 100 ரூபாயினை நெருங்கியுள்ளது. இதே டெல்லியில் பெட்ரோல் விலையானது 92.58 ரூபாய்க்கும், டீசல் விலையானது 83.22 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஏற்ற தாழ்வுக்கு என்ன காரணம்?
பெட்ரோல் டீசல் விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வரி வித்தியாசத்தினால், விலை ஏற்றத்தாழ்வில் காணப்படுகிறது. சமீபத்தில் விலையை கட்டுக்குள் வைக்க சில மாநிலங்களில் வரி விகிதமானது சற்று குறைக்கப்பட்டாலும், இன்னும் வரி விகிதங்கள் அதிகமாகவே உள்ளன.
வரி விகிதமும் அதிகம்
இந்தியாவினை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து, மக்கள் அதிகளவு வரியினையும் செலுத்துக்கின்றனர். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், அரசு லிட்டர் பெட்ரோலுக்கு 21.58 ரூபாய் வரியும், டீசலுக்கு 19.18 ரூபாயும் வரியும் அதிகரித்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியது. ஆக மொத்தத்தில் பெட்ரோலுக்கு வரியாக 32.90 ரூபாயும், டீசலுக்கு வரியாக 31.80 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
பல மாநிலங்களில் லாக்டவுன்
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே தமிழகம் உள்ளிட்ட பல மா நிலங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிப்பொருள் தேவையான குறைந்துள்ளது. அப்படி இருப்பினும் பெட்ரோல் விலையானது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
உற்பத்தி குறைப்பு
கடந்த ஆண்டே கொரோனா பரவலின் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது விலை வரலாறு காணாத சரிவினைக் கண்டது. அந்த சமயத்தில் உற்பத்தியும் அதிகமாக இருந்த நிலையில், அதனை வைக்க கூட இடமில்லாமல் நிறுவனங்கள் தவித்தன. இந்த நிலையில் தான் உற்பத்தி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதிகரித்து வரும் பரவலுக்கு மத்தியில் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆக இதுவும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.
இன்றைய விலை நிலவரம்
- டெல்லி - ரூ.92.58
- கொல்கத்தா - ரூ.92.67
- மும்பை - ரூ.98.88
- சென்னை - ரூ.94.31
- பெங்களுர் - ரூ.95.33
- டெல்லி - ரூ.83.22
- கொல்கத்தா - ரூ.86.06
- மும்பை - ரூ.90.40
- சென்னை - ரூ.88.07
- பெங்களுர் - ரூ.87.92


Click it and Unblock the Notifications