சில இடங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேர்தல் முடிந்த பின்னர் மே 4-க்கு பிறகு ஐந்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

 

நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் இருந்த நிலையில் 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 4-க்கு பிறகு ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

அதிலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிப்பொருள் தேவையான குறைந்துள்ளது. அப்படி இருப்பினும் பெட்ரோல் விலையானது மீண்டும் செஞ்சுரி அடுத்து விட்டதே எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..!

சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல்

இந்தியாவில் எரிபொருள் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினை பொறுத்து, இந்தியாவிலும் விலையில் மாற்றம் செய்யப்படும். இதற்கிடையில் அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதலினால் எண்ணென் ஆலை மூடப்பட்டது. இதனால் எண்ணெய் சப்ளையானது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும் விலை சற்று அதிகரித்துள்ளது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

அதோடு கடந்த ஆண்டே கொரோனா பரவலின் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது விலையும் மைனசில் சென்றது. ஒரு சில இடங்களில் உற்பத்தி அதிகரித்த நிலையில், அதனை வைக்க கூட இடமில்லாமல் நிறுவனங்கள் தவித்தன. இந்த நிலையில் தான் உற்பத்தியும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதிகரித்து வரும் பரவலுக்கு மத்தியிலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆக இதுவும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.

இன்றைய கச்சா எணணெய் விலை
 

இன்றைய கச்சா எணணெய் விலை

தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.51% அதிகரித்து, 65.28 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 0.54% அதிகரித்து 68.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. இந்த நிலையில் அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவில் விலை அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் வரி விகிதமும் அதிகம்

இந்தியாவில் வரி விகிதமும் அதிகம்

இந்தியாவினை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து, மக்கள் அதிகளவு வரியினையும் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், அரசு 1 லிட்டர் பெட்ரோலுக்கு 21.58 ரூபாய் வரியும், டீசலுக்கு 19.18 ரூபாயும் வரியும் அதிகரித்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியது.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம்

  • டெல்லி - ரூ.91.53
  • கொல்கத்தா - ரூ.91.66
  • மும்பை - ரூ.97.86
  • சென்னை - ரூ.93.38
  • பெங்களுர் - ரூ.93.61
  • டெல்லி - ரூ.82.06
  • கொல்கத்தா - ரூ.84.90
  • மும்பை - ரூ.89.17
  • சென்னை - ரூ.86.96
  • பெங்களுர் - ரூ.86.99

மகாராஷ்டிராவின் சில இடங்களில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol, Diesel prices in india: Petrol prices mark Rs.100 in some cities of Maharashtra

Petrol, Diesel prices in india: Petrol prices mark Rs.100 in some cities of Maharashtra
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X