சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள காரணத்தால் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதில் எவ்விதமான இடர்பாடுகளும், அரசுக்குச் நிதி சுமையும் இருக்கக் கூடாது என்பதற்காகக் கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைக் கணித்து விலையை நிர்ணயம் செய்து வந்தது.
பெரும் சுமை
இது கச்சா எண்ணெய் விலை 40 டாலரில் இருந்த போதும், ரூபாய் மதிப்பு சிறப்பாக இருந்த போதும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
தற்போது கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு மக்களுக்கும், நிறுவனங்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 முதல் 26 பைசாவும், டீசல் விலை வெறும் 6 முதல் 7 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை வரலாற்று உச்சத்தையும், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை
சர்வதேச சந்தையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் கணிசமான தடுமாற்றத்தை அடைந்துள்ள நிலையில் பெருமளவிலான முதலீடுகள் கச்சா எண்ணெய் சந்தையில் குவிந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையில் எரிபொருள் தேவை என்பது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
இதன் வாயிலாக WTI கச்சா எண்ணெய் விலை இன்றைய வர்த்தகத்தில் 0.11 சதவீதம் அதிகரித்து 73.16 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 73 டாலரில் இருந்து மீண்டும் 75.29 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எரிபொருள் விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்று இந்தியாவின் முக்கியமாக நகரங்களில் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 98.88 ரூபாய்
டெல்லி : 97.76 ரூபாய்
கொல்கட்டா : 97.63 ரூபாய்
மும்பை : 103.89 ரூபாய்
பெங்களூர் : 101.03 ரூபாய்
ஹைதராபாத் : 101.60 ரூபாய்
கோழிக்கோடு : 98.17 ரூபாய்
டீசல் விலை
இன்று இந்தியாவின் முக்கியமான நகரங்களில் டீசல் நிலவரம்
- சென்னை : 92.89 ரூபாய்
- டெல்லி : 88.30 ரூபாய்
- கொல்கட்டா : 91.15 ரூபாய்
- மும்பை : 95.79 ரூபாய்
- பெங்களூர் : 93.61 ரூபாய்
- ஹைதராபாத் : 96.25 ரூபாய்
- கோழிக்கோடு : 93.37 ரூபாய்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications