இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
இந்த விற்பனை சரிவு மூலம் ஏற்படும் வரி வசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில், நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மத்திய அரசு கட்டுப்பட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மே மாதத்தில் 10வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்று இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 முதல் 27 சதவீதம் வரையிலும், டீசல் விலையில் 27 முதல் 31 பைசா வரையில் உயர்த்தப்பட்டு உள்ள காரணத்தால், நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய விலை உயர்வின் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 பைசா உயர்ந்து 95.54 ரூபாய்க்கும், டீசல் விலை 27 பைசா உயர்ந்து 88.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே வர்த்தக அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ள வேளையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டு வரும் தொடர் உயர்வு அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
99 ரூபாயை கடந்த பெட்ரோல்
மேலும் மும்பையில் இன்றைய விலை உயர்வின் வாயிலாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாயை கடந்து 99.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காரணத்தால் விரைவில் 100 ரூபாய் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் பெட்ரோல் , டீசல் மீதான விலை மற்றும் வரியில் எவ்விதமான உயர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
WTI, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையிலும் கடந்த சில நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 0.32 சதவீதம் அதிகரித்து 66.48 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவீதம் அதிகரித்து 69.67 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
OPEC கச்சா எண்ணெய் விலை
ஆனால் இதேவேளையில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 3 நாட்களுக்கு முன்பாக 0.62 சதவீதம் சரிந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 66.16 டாலருக்கு விற்பனை செய்கிறது, இதே காலகட்டத்தில் இந்திய பேஸ்க்ட் கச்சா எண்ணெய் விலை 1.76 சதவீதம் சரிந்து 66.26 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை
நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை
டெல்லி : 92.85 ரூபாய்
கொல்கத்தா : 92.92 ரூபாய்
மும்பை : 99.14 ரூபாய்
சென்னை : 94.54 ரூபாய்
பெங்களூரூ : 95.94 ரூபாய்
ஹைதராபாத் : 96.50 ரூபாய்
ஸ்ரீ கங்காநகர் : 103.80 ரூபாய்
ஜெய்ப்பூர் : 99.30 ரூபாய்
டீசல் விலை
நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய டீசல் விலை
டெல்லி : 83.51 ரூபாய்
கொல்கத்தா : 86.35 ரூபாய்
மும்பை : 90.71 ரூபாய்
சென்னை : 88.34 ரூபாய்
பெங்களூரூ : 88.53 ரூபாய்
ஹைதராபாத் : 91.04 ரூபாய்
ஸ்ரீ கங்காநகர் : 96.30 ரூபாய்
ஜெய்ப்பூர் : 92.18 ரூபாய்


Click it and Unblock the Notifications