புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. மீண்டும் விலை உயர்வு.. மக்கள் அவதி..!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கனவே அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை 3 வருட உயர்வை எட்டியதைத் தொடர்ந்து இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு மீண்டும் விலையை உயர்த்த துவங்கியது.

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை தனது 3 வருட உச்ச விலையில் இருந்து 2 டாலர் வரையில் சரிந்து இருந்தாலும், இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது வருகிறது.

ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தப் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்றைய விலை உயர்வின் மூலம் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

அக்டோபர் மாதத்தின் முதல் நாளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் ரீடைல் விற்பனை நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 25 பைசாவும், டீசல் விலையை 30 பைசா வரையிலும் உயர்த்தியுள்ளது. இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு,

கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு,

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் ரீடைல் விற்பனை விலையை நிர்ணயம் செய்கிறது. இந்நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு, சுத்திகரிப்புச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், டீலர் கமிஷன் ஆகியவற்றைச் சேர்ந்து நிர்ணயம் செய்கிறது.

மத்திய மாநில அரசு

மத்திய மாநில அரசு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களை விடவும் மத்திய மாநில அரசுக்குத் தான் அதிக லாபம். இதற்கு முக்கியக் காரணம் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரி தான். 2021-22 நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டுக்கும் குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் கிடைக்கிறது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • சென்னை - 99.58 ரூபாய்
  • டெல்லி - 101.89 ரூபாய்
  • கொல்கத்தா - 102.47 ரூபாய்
  • மும்பை - 107.95 ரூபாய்
  • பெங்களூர் - 105.44 ரூபாய்
  • ஹைதராபாத் - 106.00 ரூபாய்
  • கோழிக்கோடு - 102.36 ரூபாய்
  • போபால் - 110.37 ரூபாய்
  • இந்தூர்- 110.41 ரூபாய்
டீசல் விலை

டீசல் விலை

  • சென்னை - 94.74 ரூபாய்
  • டெல்லி - 90.17 ரூபாய்
  • கொல்கத்தா - 93.27 ரூபாய்
  • மும்பை - 97.84 ரூபாய்
  • பெங்களூர் - 95.70 ரூபாய்
  • ஹைதராபாத் - 98.39 ரூபாய்
  • கோழிக்கோடு - 95.39 ரூபாய்
கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

மேலும் இன்று கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.35 சதவீதம் சரிந்து 74.77 டாலர் வரையிலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.32 சதவீதம் வரையில் குறைந்து 78.06 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதேவேளையில் இயற்கை எரிவாயு விலை 1.33 சதவீதம் வரையில் உயர்ந்து 5.945 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்த வேளையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+