கொரோனா தொற்று மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும் இந்த வேளையில் மக்களுக்கும் சரி, நாட்டின் வளர்ச்சிக்கும் சரி விலைவாசி பெரும் சுமையாக உள்ளது.
இந்த விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாட்டின் நிலையைச் சற்றும் உணராமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதற்கு எதிராக மத்திய அரசும் வரிக் குறைப்பு போன்று எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்நிலையில் இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 27 பைசாவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தையும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் அளவை நெருங்கியுள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும் எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருக்கும். வழக்கம் போல் இந்த முறையும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அதாவது மே 4 முதல் சுமார் 21 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
6 மாநிலங்கள்
இந்த விலை உயர்வின் மூலம் இந்தியாவில் 6 மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை அளவீட்டை நெருங்கியுள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 96.64 ரூபாய்
டெல்லி : 95.56 ரூபாய்
கொல்கத்தா : 95.52 ரூபாய்
மும்பை : 101.76 ரூபாய்
பெங்களூர் : 98.75 ரூபாய்
ஹைதராபாத் : 99.31 ரூபாய்
கோழிக்கோடு : 95.97 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 91.15 ரூபாய்
டெல்லி : 86.47 ரூபாய்
கொல்கத்தா : 89.32 ரூபாய்
மும்பை : 93.85 ரூபாய்
பெங்களூர் : 91.67 ரூபாய்
ஹைதராபாத் : 94.26 ரூபாய்
கோழிக்கோடு : 91.44 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.59 சதவீதம் அதிகரித்து 70.46 டாலருக்கும், 0.55 சதவீதம் அதிகரித்து 72.62 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஈரான் உடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நாளை துவங்கி உள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், லண்டன், சீனா ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்த காரணத்தால் இதன் விலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications