இந்தியாவில் தொடர்ந்து 24வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாயாகவும், டெல்லியில் 91.17 ரூபாயாகவும், பெங்களூரில் 94.22 ரூபாயாகவும், ஹைத்ராபாத்தில் 94.79 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே டீசல் விலையானது இன்று சென்னையில் 86.45 ரூபாயாகவும், டெல்லியில் 81.47 ரூபாயாகவும், பெங்களூரில் 86.37 ரூபாயாகவும், ஹைத்ராபாத்தில் 88.86 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மக்கள் தனியார் போக்குவரத்து மீது ஆர்வம்
ஏனெனில் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது பெட்ரோல், டீசல். அதிலும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் காரணமாக மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சமூக இடைவெளி, பொது சுகாதாரம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. மாறாக தனியார் போக்குவரத்துகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
24 நாட்களாக மாற்றமில்லை
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது சர்வதேச சந்தையில் நிலவரத்திற்கு ஏற்ப அனுதினமும் மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தேவையும் அதிகரித்து வரும் இந்த நிலையில், தொடர்ச்சியாக 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது, தேர்தல் வரவுள்ளதாலோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
WTI கச்சா எண்ணெய் நிலவரம்
இதற்கிடையில் இன்று கச்சா எண்ணெய் விலையினை பார்க்கும்போது இன்று 61 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது. WTI கச்சா எண்ணெய் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த மார்ச் 8ல் இருந்து தொடர்ச்சியாக குறைந்த வண்ணமே உள்ளது. மார்ச் 8 அன்று 67.98 டாலர்களாக இருந்த உச்சமானது, இன்று 60.72 டாலர்களாக குறைந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது தற்போது 1.44% குறைந்து, 63.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், சில நகரங்களில் 100 ரூபாயினை கூட தொட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 24 நாட்களாக மாற்றமில்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதி அடையச் செய்துள்ளது. எனினும் இப்படியே இருக்குமா? தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் விலையில் மாற்றமில்லாமல் உள்ளதோ என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!



Click it and Unblock the Notifications