இதுதான் இந்தியா.. விமான எரிபொருள் வெறும் ரூ.79 தான், ஆனால் பெட்ரோல் விலை 118 ரூபாய்.!

இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள் அனைத்தும் விலை அதிகரித்துள்ள காரணத்தால் இயல்பு வாழ்க்கையே பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானத்திற்கான எரிபொருள் விலை லிட்டருக்கு 79 ரூபாயாக இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் விலை 118 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

இன்று பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக உயர்ந்துள்ள காரணத்தால் புதிய வரலாற்று உச்ச அளவீட்டை அடைந்துள்ளது. இதேவேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

35 பைசா வரை உயர்வு

35 பைசா வரை உயர்வு

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்றும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 35 பைசா வரையில் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.92 ரூபாயாகவும், டீசல் விலை 99.92 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

விமான எரிபொருள் விலை

விமான எரிபொருள் விலை

இதேவேளையில் விமானத்தை இயக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் விலை டெல்லியில் வெறும் 79 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதாவது டெல்லியில் விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டர் விலை 79,020.16 ரூபாய் இதன் மூலம் ஒரு லிட்டர் விலை 79.020 ரூபாய்.

இதுதான் இந்தியா

இதுதான் இந்தியா

இப்படியிருக்கையில் டெல்லியில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களில் செலுத்தப்படும் பெட்ரோல் விலை 106.89 ரூபாய். இது விமான எரிபொருள் விலையை விடவும் கிட்டத்தட்ட 35.3 சதவீதம் அதிகமாகும்.

ராஜஸ்தான் கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 118.73 ரூபாய்.

 இன்றைய பெட்ரோல் விலை (Oct 22)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 22)

சென்னை - 103.92 ரூபாய், டெல்லி - 106.89 ரூபாய், கொல்கத்தா - 107.44 ரூபாய், மும்பை - 112.44 ரூபாய், பெங்களூர் - 110.61 ரூபாய், ஹைதராபாத் - 111.18 ரூபாய், கோழிக்கோடு - 107.37 ரூபாய், போபால் - 115.54 ரூபாய், இந்தூர்- 115.58 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 0.44 சதவீதம் சரிந்து 82.14 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.53 சதவீதம் சரிந்து 84.16 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+