சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகிறது.
இந்தப் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகளவிலான வரி வருமானம் கிடைத்தாலும், சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் வாரத்தின் முதல் நாளே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தலா 30 பைசா வரையில் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் நாட்டின் பல பகுதிகளில் புதிதாகப் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.51 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பேரல் 71.27 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதோடு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.54 சதவீதம் அதிகரித்து 73.08 டாலருக்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய்
இதற்கு இணையாக இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் இதன் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
100 ரூபாயை கடக்கும் பெட்ரோல் விலை
இதற்கிடையில் இன்று ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை 29 பைசா முதல் 31 பைசா வரையில் உயர்ந்துள்ளதால் மும்பை, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதியிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.
பெட்ரோல் விலை
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 97.69 ரூபாய்
டெல்லி : 96.41 ரூபாய்
கொல்கத்தா : 96.34 ரூபாய்
மும்பை : 102.58 ரூபாய்
பெங்களூர் : 99.63 ரூபாய்
ஹைதராபாத் : 100.20 ரூபாய்
கோழிக்கோடு : 96.82 ரூபாய்
டீசல் விலை
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 91.92 ரூபாய்
டெல்லி : 87.28 ரூபாய்
கொல்கத்தா : 90.12 ரூபாய்
மும்பை : 94.70 ரூபாய்
பெங்களூர் : 92.52 ரூபாய்
ஹைதராபாத் : 95.14 ரூபாய்
கோழிக்கோடு : 92.29 ரூபாய்
அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.15 ரூபாயாகச் சரிந்துள்ளது. கடந்த வாரம் 72 ரூபாய் அளவீட்டில் இருந்து ரூபாய் மதிப்பு இன்று 73.15 ரூபாய் அளவிற்குச் சரிந்துள்ளது. டாலர் மதிப்பில் ஏற்பட்டு உள்ள சரிவு இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications