பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சம்.. மத்திய அரசு எப்போது வரியை குறைக்கும்..?!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்று 4வது நாளாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சமையல் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வு நடுத்தர மக்களை அதிகம் பாதித்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் உடல் நலம், பொருளாதாரம் என அனைத்திலும் மீண்டு வரும் இந்த வேளையில் கூடுதலாக கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி பெட்ரோல், டீசல், சிலிண்டருக்கு செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

 பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

இந்நிலையில் இன்று பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 30 பைசாவும், டீசல் விலை 35 பைசாவும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது.

 மக்கள் பிரச்சனை

மக்கள் பிரச்சனை

ஏற்கனவே கூறியது போல் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என கூறப்பட்டாலும், இதற்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, ஆனாலும் அக்காலக்கட்டத்தில் பெட்ரோல் விலை 75 ரூபாய் அளவீட்டில் தான் இருந்தது.

 வரி பாதிப்பு

வரி பாதிப்பு

தற்போது கச்சா எண்ணெய் விலை 80 டாலர் அளவீட்டில் இருக்கும் போதே இந்தியாவில் பெட்ரோல் விலை 110 ஐ நெருங்கி வருகிறது. இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரி தான். ஏற்கனவே பல மாநிலங்களில் எரிபொருள் மீதான வரியை குறைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்காமல் உள்ளது.

 இன்றைய பெட்ரோல் விலை (Oct 8)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 8)

சென்னை - 100.75 ரூபாய், டெல்லி - 103.24 ரூபாய், கொல்கத்தா - 103.94 ரூபாய், மும்பை - 109.25 ரூபாய், பெங்களூர் - 106.83 ரூபாய், ஹைதராபாத் - 107.40 ரூபாய், கோழிக்கோடு - 103.71 ரூபாய், போபால் - 111.76 ரூபாய், இந்தூர்- 111.80 ரூபாய்.

 இன்றைய டீசல் விலை (Oct 8)

இன்றைய டீசல் விலை (Oct 8)

சென்னை - 96.26 ரூபாய், டெல்லி - 91.77 ரூபாய், கொல்கத்தா - 94.88 ரூபாய், மும்பை - 99.55 ரூபாய், பெங்களூர் - 97.40 ரூபாய், ஹைதராபாத் - 100.13 ரூபாய், கோழிக்கோடு - 97.08 ரூபாய்.

 கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 1.17 சதவீதம் அதிகரித்து 79.22 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.09 சதவீதம் வரையில் அதிகரித்து மீண்டும் 82.84 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதேபோல் இயற்கை எரிவாயு விலையும் 3.14 சதவீதம் அதிகரித்து 5.855 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+