பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக உயர்வு..!

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள வேளையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான இடத்தில் பெட்ரோல் விலை 110 ரூபாயை நெருங்க துவங்கியுள்ளது. இது தினமும் வேலைக்குச் செல்லும் மக்களுக்கு அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதேபோல் பொதுப் போக்குவரத்திலும் டீசல் விலை உயர்வால் அதிகச் சுமை உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் தேவை

கச்சா எண்ணெய் தேவை

கடந்த ஒரு வருடத்தில் உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் தேவையின் அளவு மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் உயர்ந்தது. இதன் மூலம் 50 ரூபாய்க்கு இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் 75 டாலர் தற்போது 85 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

விளாடிமிர் புதின்

விளாடிமிர் புதின்

இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் விலை 100 டாலர் வரையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என OPEC அமைப்பில் பேசிய போது, இதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் கூறினார்.

OPEC நாடுகள்

OPEC நாடுகள்

2 வருடமாகக் கச்சா எண்ணெய் விலை சரிவால் அதிகளவிலான வருவாய் பாதிப்பை எதிர்கொண்ட OPEC நாடுகள் இந்தக் கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி உற்பத்தியைக் குறைத்து விலையை அதிகரித்தது. இதேவேளையில் வல்லரசு நாடுகள் வேகமாக வளரும் காரணத்தால் நாணயத்தின் மதிப்பிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு

கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்புச் சரிவு ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் இதேவேளையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி அதிகமாக இருக்கும் காரணத்தால் பெட்ரோல் விலை 115 ரூபாயும், டீசல் விலை 105 ரூபாயை நெருங்கத் துவங்கியுள்ளது.

பெட்ரோல் விலை (Oct 30)

பெட்ரோல் விலை (Oct 30)

4வது நாளாகப் பெட்ரோல் விலை உயரும் நிலையில் இன்று சென்னை - 105.74 ரூபாய், டெல்லி - 108.99 ரூபாய், கொல்கத்தா - 109.46 ரூபாய், மும்பை - 114.81 ரூபாய், பெங்களூர் - 112.79 ரூபாய், ஹைதராபாத் - 113.36 ரூபாய், கோழிக்கோடு - 109.47 ரூபாய், போபால் - 117.71 ரூபாய், இந்தூர்- 117.75 ரூபாய்.

டீசல் விலை (Oct 30)

டீசல் விலை (Oct 30)

சென்னை - 101.92 ரூபாய், டெல்லி - 97.72 ரூபாய், கொல்கத்தா - 100.84 ரூபாய், மும்பை - 105.86 ரூபாய், பெங்களூர் - 103.72 ரூபாய், ஹைதராபாத் - 106.60 ரூபாய், கோழிக்கோடு - 103.35 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+