பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மட்டும் தான் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குள் வராமல் இருக்கின்றன.
எனவே இந்த பொருட்கள் மீது, இப்போது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் கலால் வரி முதல் வாட் வரி வரை பல வரிகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதோடு மற்ற சில கூடுதல் வரிகளையும் மத்திய அரசு விதித்து வசூலித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தான் இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி.
சமீபத்தைய உயர்வு
கடந்த மார்ச் 14, 2020 அன்று தான் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. ஆனால் இந்த முறை மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) உயர்த்தி இருக்கிறார்கள்.
பெட்ரோல்
இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 10 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 18 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியில், இந்த வரி வரம்பு உயர்வு, வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக வந்து விழுந்து இருக்கிறது.
டீசல்
அதே போல, ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு 4 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 12 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. பொதுவாக டீசல் விலை அதிகரித்தால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை ஏற்றத்தைக் கொண்டு வரும் என்பார்கள்.
என்ன பயன்
இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) அதிகரிப்பதால் நமக்கோ அல்லது அரசுக்கோ என்ன பயன் என்று கேட்கிறீர்களா..? இனி வரும் காலங்களில் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு லிட்டருக்கு 18 மற்றும் 12 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு தான் இன்றே வரம்புகளை அதிகரித்து இருக்கிறார்களாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications