நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்து இந்த திட்டத்தில் கைவைக்கப்படுமா..? என்னதான் தீர்வு..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய நிதியமைச்சகம் கலால் வரி குறைப்பை அறிவித்துள்ளது. இந்த முடிவு பொதுமக்களுக்கு உடனடி நிவாரணமாக கிடைக்காவிட்டாலும், விலை உயர்வு அச்சம் குறைந்துள்ளது. இதேவேளையில் இத்தகைய முடிவை எடுப்பதற்கு பின்னால் முக்கிய காரணம் உள்ளது. இதோடு இந்த வரி குறைப்பு காரணமாக மத்திய அரசுக்கு பெரிய வருவாய் இழப்பு இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

இந்த கலால் வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.1.15 லட்சம் கோடி வருவாயை இழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அரசின் நிதிநிலைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும்.

நிர்மலா சீதாராமன் எடுத்த ரூ.10 முடிவு..!  அடுத்து இந்த திட்டத்தில் கைவைக்கப்படுமா? என்னதான் தீர்வு?

இந்தியாவில் தினமும் பல லட்சம் லிட்டர் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், லிட்டருக்கு ரூ.10 வரி குறைப்பே தினசரி ரூ.450 முதல் ரூ.500 கோடி வரை அரசுக்கு நேரடி வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனை ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், ரூ.1.6 லட்சம் கோடி முதல் ரூ.1.8 லட்சம் கோடி வரை இழப்பு (12 மாதத்திற்கானது) ஏற்படும்.

இத்தகைய இழப்பு, அரசின் மொத்த பட்ஜெட்டில் ஒரு பெரும் பகுதியை பாதிக்கும். 1.6 லட்சம் கோடி என்பது மத்திய அரசு ஒரு வருடத்திற்கு நாட்டு மக்களின் கல்வி செலவுகளுக்குச் (ரூ.1.4 லட்சம் கோடி) ஒதுக்கப்படும் சமமான தொகையாகும், இதேபோல் விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்திற்கு ஒதுக்கப்படும் (ரூ.63,500 கோடி) தொகையை விட இரட்டிப்பாகவும் உள்ளது.

நிதிக் பற்றாக்குறை அபாயம்
இந்த வருவாய் இழப்பு சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்றால், அரசின் நிதிக் பற்றாக்குறை சுமார் 0.3% வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதாவது, அரசு சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யும் நிலை உருவாகும். இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியதாகும்.

முதலீட்டு செலவுகள் பாதிப்பு
இத்தகைய சூழ்நிலையில், அரசு செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். வரலாற்று தரவுகளைப் பார்க்கும்போது, இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு செலவுகளை குறைக்க முதலில் கைவைக்கப்படுவது மூலதன செலவுகள் தான், அதாவது Capital Expenditure செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இதை குறைத்தால் மத்திய அரசு சாலை, ரயில், அடிப்படை கட்டமைப்பு போன்ற பெரிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், நாட்டின் வளர்ச்சியின் வேகம் மந்தமாகும் அபாயம் உள்ளது.

நலத்திட்டங்களுக்கும் பாதிப்பு சாத்தியம்
இது மட்டும் அல்லாமல், வீட்டு வசதி, குடிநீர் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமான நலத்திட்டங்களுக்கும் நிதி குறைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சில திட்டங்களில் முழுமையான செலவீனம் கிடைக்காத நிலையில், இப்போது இத்திட்டத்திற்கான நிதியை முழுமையாக நிறுத்தப்படலாம்.

அதே நேரத்தில், உரம் போன்ற முக்கிய பொருட்களான மானிய செலவுகள் அதிகரித்து கொண்டிருப்பதால், அரசுக்கு செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் இடமும் குறைந்துக்கொண்டு இருக்கிறது.

இரட்டை சவால்
மொத்தத்தில், அரசு இரண்டு முக்கிய சவால்களுக்கு இடையில் சமநிலை காண வேண்டிய நிலைமையில் உள்ளது. ஒருபுறம் பொதுமக்களுக்கு எரிபொருள் விலை உயர்விலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். மறுபுறம், நாட்டின் நிதிநிலையை சீராக வைத்திருந்து நாட்டின் வளர்ச்சி வேகத்தை நிலைநாட்ட வேண்டும்.

இந்த வரி குறைப்பு நடவடிக்கை, எண்ணெய் நிறுவனங்களின் நட்டத்தை குறைத்து, எரிபொருள் விலையை உடனடியாக உயராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதன் எதிரொலி அரசின் நிதிநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தான் உண்மையான பிரச்சனை.

இந்த வரி குறைப்பு முடிவு குறுகிய காலத்தில் விலையை கட்டுப்படுத்த வாய்ப்பு வழங்கினாலும், நீண்டகாலத்தில் அரசுக்கான செலவுகளை சரிசெய்ய மாற்று திட்டங்களையில் கையில் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த 1.2 லட்சம் கோடி இழப்பை சரி செய்ய மத்திய மாற்று வழியில் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட வேண்டும் இல்லையெனில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். இது இரண்டுமே இந்திய சந்தைக்கு பிரச்சனை தான்.

முந்தை காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய பிரச்சனை வரும் போது ஆயில் பத்திரங்கள் மூலம் நிதியை நிதியை திரட்டி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்தியது. இத கடனை பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு முடிக்கப்பட்டது.

எனவே இந்த நிதி இழப்பை சமாளிக்கவும், மத்திய அரசு நிதியை திரட்டவும் புதிய வரி உயர்வு அல்லது செஸ் விதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளையில் கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பயன்படுத்தாத அல்லது பணமாக்க முடியாத அரசு சொத்துக்களை நீண்ட கால குத்தகைக்கு விடும் திட்டத்தை விரிவாக்கம் செய்வதாகவும், பெரிய இலக்குகளை வைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவித்தது. புதிய நிதி ஆதாரத்திற்காக இத்திட்டத்தை விரைவாக்கலாம்.

எரிபொருள் விலை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்துவது அரசுக்கு இந்த கலால் வரி குறைப்பு முக்கியமானதாக இருந்தாலும், இதற்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளை எப்படி சரி செய்யப்போகிறது என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

மத்திய அரசு எப்படி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா 10 ரூபாய் குறைத்தது மட்டும் அல்லாமல் டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு அரசு புதிய வரிகளை விதித்துள்ளது வரி வருவாயை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்றுமதி செய்யப்படும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.21.5 மற்றும் ATFக்கு ரூ.29.5 வரி விதிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+