இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை உயர்வு பெரும் தடையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையிலும் மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் கிடைக்கும் வரி வருமான அளவுகள் குறைந்துள்ளதாக இன்று பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2021
அதிகளவிலான எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையின் துவக்கத்திலேயே, நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த வலுவான பட்ஜெட் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதிநிலையை
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்பு தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சரி செய்ய 3 ஆண்டுகள் ஆகும். ஓராண்டில் சரி செய்ய முடியாத அளவுக்குப் பணிகள் மிகக் கடுமையாக உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வரி
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி விதிப்பு குறித்துப் பேசிய பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பு கூட்டாட்சியை நீர்த்துப் போகச் செய்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் மூலம் பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசுக்கான வரி வருமானம் அதிகரித்தும், மாநில அரசுக்கான பகிர்வுக்கான வரி அளவு குறைந்துள்ளது.
மேல்வரிகள் விதிப்பு
பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் மேல்வரிகள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சிஏஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெற தனிக் குழு
மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெறத் தமிழ்நாடு அரசு குழு அமைக்கப்படும் எனப் பட்ஜெட் தாக்கலில் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிப்புக் கோரிக்கை அடிப்படையில் தமிழக அரசுக்கான ஜிஎஸ்டி வரிப் பங்கை பெற முயற்சி செய்யும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications