இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் பண்டிகை காலத்தைக் கூட மக்கள் நிம்மதியாகக் கொண்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலையை உயர்த்தினாலும் மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரியின் காரணமாகப் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை ஆகிய அனைத்தும் அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம்
இந்தப் பண்டிகை காலத்தில் மக்கள் பயணம் செய்வதற்குப் பெட்ரோல், விற்பனை பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல டீசல், பண்டிகை காலத்தில் உணவு சமைக்கச் சமையல் சிலிண்டர் என அனைத்தும் முக்கியத் தேவையாக இருக்கும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
5வது நாளாக உயர்வு
இந்த நிலையில் இன்று 5வது நாளாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில், பார்த் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 பைசாவும், ஒரு லீட்டர் டீசல் விலையை 35 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை
இதன் மூலம் இன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.27 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது, பிற முன்னணி பொருளாதார மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் தமிழக அரசு அறிவித்த 3 ரூபாய் விலை குறைப்பு தான்.
தமிழ்நாட்டில் டீசல் விலை
இதேபோல் 5 வது நாள் உயர்வின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் டீசல் விலை 96.93 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100.29 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 100 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 9)
சென்னை - 101.27 ரூபாய், டெல்லி - 103.84 ரூபாய், கொல்கத்தா - 104.52 ரூபாய், மும்பை - 109.83 ரூபாய், பெங்களூர் - 107.46 ரூபாய், ஹைதராபாத் - 108.02 ரூபாய், கோழிக்கோடு - 104.31 ரூபாய், போபால் - 112.38 ரூபாய், இந்தூர்- 112.42 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 9)
சென்னை - 96.93 ரூபாய், டெல்லி - 92.47 ரூபாய், கொல்கத்தா - 95.58 ரூபாய், மும்பை - 110.29 ரூபாய், பெங்களூர் - 98.15 ரூபாய், ஹைதராபாத் - 100.89 ரூபாய், கோழிக்கோடு - 97.82 ரூபாய்.
இன்றைய எல்பிஜி விலை (Oct 9)
டெல்லி - 899.5 ரூபாய், கொல்கத்தா - 926 ரூபாய், மும்பை - 899.5 ரூபாய், சென்னை - 915.5 ரூபாய், குர்கான் - 908.5 ரூபாய், நொய்டா - 897.5 ரூபாய், பெங்களூரு - 902.5 ரூபாய், புவனேஸ்வர் - 926 ரூபாய், சண்டிகர் - 909 ரூபாய், ஹைதராபாத் - 952 ரூபாய், ஜெய்ப்பூர் - 903.5 ரூபாய், லக்னோ - 937.5 ரூபாய், பாட்னா - 998 ரூபாய், திருவனந்தபுரம் - 909 ரூபாய்,
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.34 சதவீதம் அதிகரித்து 79.35 டாலரை எட்டியுள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.54 சதவீதம் அதிகரித்து 82.39 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications