இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்துத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பு சுமார் 18 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் இருந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை
இந்நிலையில் இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை 34-35 பைசா வரையில் நாடு முழுவதும் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.
டீசல் விலை மாற்றமில்லை
டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வர்த்தகர்கள் மத்தியிலும், விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
லாக்டவுன் தளர்வுகள்
ஆனால் நாடு முழுவதும் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து அதிகரிக்கும் வேளையில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பது மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுமையாக உள்ளது.
டெல்லியில் 100 ரூபாய்
இன்றைய விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத வகையில் 99.86 ரூபாய் அளவில் உள்ளது. அடுத்த விலை உயர்வு நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் போது நாட்டின் பிற முக்கிய நகரங்கள் போல் டெல்லியிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விடும்.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 100.75 ரூபாய்
டெல்லி : 99.86 ரூபாய்
கொல்கத்தா : 99.84 ரூபாய்
மும்பை : 105.92 ரூபாய்
பெங்களூர் : 103.20 ரூபாய்
ஹைதராபாத் : 103.78 ரூபாய்
கோழிக்கோடு : 100.27 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
சென்னை : 93.91 ரூபாய்
டெல்லி : 89.36 ரூபாய்
கொல்கத்தா : 92.27 ரூபாய்
மும்பை : 96.91 ரூபாய்
பெங்களூர் : 94.72 ரூபாய்
ஹைதராபாத் : 97.40 ரூபாய்
கோழிக்கோடு : 94.48 ரூபாய்
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications