சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வருட உச்சத்தைத் தொட்டு உள்ள காரணத்தால் இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இன்றைய உயர்வின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய்
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 முதல் 25 பைசா வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் டீசல் விலை 24 முதல் 27 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
2 மாதத்திற்குப் பின் உயர்வு
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விலையைக் கடந்த 4 நாட்களாக உயர்த்தி வந்த நிலையில் வர்த்தகச் சந்தை அதிகளவிலாக பாதிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் ஜூலை 17க்குப் பின் அதாவது 2 மாதத்திற்குப் பின்பு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
மக்களுக்குப் பாதிப்பு
டீசல் விலை உயர்வால் உற்பத்தி பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள், நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்கள்
இந்தியன் ஆயில், பார்த் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 வாரங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் இருந்தது. குறிப்பிடத்தக்கது. இன்றைய உயர்வின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை
சென்னை - 99.15 ரூபாய்
டெல்லி - 101.39 ரூபாய்
கொல்கத்தா - 101.87 ரூபாய்
மும்பை - 107.47 ரூபாய்
பெங்களூர் - 104.92 ரூபாய்
ஹைதராபாத் - 105.48 ரூபாய்
கோழிக்கோடு - 101.86 ரூபாய்
இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான பொருளாதார மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.
டீசல் விலை தொடர் உயர்வு
சென்னை - 94.17 ரூபாய்
டெல்லி - 89.57 ரூபாய்
கொல்கத்தா - 92.67 ரூபாய்
மும்பை - 97.21 ரூபாய்
பெங்களூர் - 95.06 ரூபாய்
ஹைதராபாத் - 97.74 ரூபாய்
கோழிக்கோடு - 94.76 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.86 சதவீதம் அதிகரித்து 76.10 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.79 சதவீதம் அதிகரித்து 80.16 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications