சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் மத்தியிலான கச்சா எண்ணெய் உற்பத்தி பிரச்சனையைத் தீர்க்க இரு நாடுகள் மத்தியில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதனால் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது நிச்சயமாகியுள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் விலை கடந்த நாட்களில் பெரிய அளவில் குறைந்து மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இந்தியாவில் ஜூலை மாதத்தில் இன்றுடன் சேர்த்து சுமார் 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை உயர்வு
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 பைசா வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு டீசல் விலை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
100 ரூபாய் அளவீடு
இந்தியாவில் ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் மே மாதமே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில், மத்திய பிரதேசம் போபாலில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய்க்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 98.67 ரூபாய்.
மும்பை டூ பாகிஸ்தான்
இன்றைய விலை உயர்வின் மூலம் மும்பையில் பெட்ரோல் விலை 108 ரூபாயை நெருங்கியுள்ளது. இந்தியாவைப் போல் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5.40 ரூபாய் அதிகரிக்கரிப்பட்டு 118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 102.49 ரூபாய்
டெல்லி : 101.84 ரூபாய்
கொல்கத்தா : 102.08 ரூபாய்
மும்பை : 107.83 ரூபாய்
பெங்களூர் : 105.25 ரூபாய்
ஹைதராபாத் : 105.83 ரூபாய்
கோழிக்கோடு : 102.95 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இன்று டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் விலை உயரவில்லை. இதன் மூலம் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
சென்னை : 94.39 ரூபாய்
டெல்லி : 89.87 ரூபாய்
கொல்கத்தா : 92.02 ரூபாய்
மும்பை : 97.45 ரூபாய்
பெங்களூர் : 95.26 ரூபாய்
ஹைதராபாத் : 97.96 ரூபாய்
கோழிக்கோடு : 95.02 ரூபாய்


Click it and Unblock the Notifications