பெட்ரோல் 7வது நாளாக தொடர் உயர்வு.. எப்போது குறையும்..?!

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்ந்து வரும் காரணத்தால் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று டீசல் விலையில் எவ்விதமான மாற்றத்தையும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காதது வர்த்தகச் சந்தையைக் குஷிப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மக்கள் நிலை

மக்கள் நிலை

சரக்கு போக்குவரத்து முதல் தினசரி மக்கள் போக்குவரத்துக்காகப் பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் இதன் விலையும் அனைத்து நுகர்வு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் எப்போது தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் எனக் கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நாடு முழுவதும் 0.30 முதல் 0.34 பைசா வரையில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆனால் டீசல் விலை இன்று உயர்வில்லை.

மத்திய அரசு பேச்சுவார்த்தை

மத்திய அரசு பேச்சுவார்த்தை

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு இதன் மீது விதித்திருக்கும் அதிகப்படியான வரியை குறைத்தாலே போதுமானது, ஆனால் அதைச் செய்யவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு எரிபொருள் விலையைக் குறைக்கப் பல கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடன் சப்ளை மற்றும் டிமாண்ட் பிரச்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உடனடி பலன்

உடனடி பலன்

இந்தப் பேச்சுவார்த்தை உடனடியாகப் பலன் அளிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மக்களின் சுமையைக் குறைக்கப் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு வரியைக் குறைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாகவே உள்ளது.

பெட்ரோல் விலை (NOV 02)

பெட்ரோல் விலை (NOV 02)

சென்னை - 106.66 ரூபாய், டெல்லி - 110.04 ரூபாய், கொல்கத்தா - 110.49 ரூபாய், மும்பை - 115.85 ரூபாய், பெங்களூர் - 113.93 ரூபாய், ஹைதராபாத் - 114.49 ரூபாய், கோழிக்கோடு - 110.54 ரூபாய், போபால் - 118.83 ரூபாய், இந்தூர்- 118.86 ரூபாய்.

டீசல் விலை (NOV 02)

டீசல் விலை (NOV 02)

சென்னை - 102.59 ரூபாய், டெல்லி - 98.42 ரூபாய், கொல்கத்தா - 101.56 ரூபாய், மும்பை - 106.62 ரூபாய், பெங்களூர் - 104.50 ரூபாய், ஹைதராபாத் - 107.40 ரூபாய், கோழிக்கோடு - 104.09 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+