சர்வதசே கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் வரையில் அதிகரித்தது. இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலை அளித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தைகள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 முதல் 27 பைசா வரையிலும், ஒரு லிட்டர் டீசல் விலை 28-30 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
5 மாநில தேர்தல் முடிவு
மேலும் 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம், விலைவாசி, வர்த்தகச் சூழ்நிலைகள் குறித்து எவ்விதமான புரிதலும் இல்லாமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
மே 4ஆம் தேதிக்குப் பின்
இதன்படி மே 4ஆம் தேதிக்குப் பின் செய்யப்பட்ட விலை உயர்வின் வாயிலாக மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
100 ரூபாய் அளவை தாண்டிய 7 மாநிலங்கள்
இந்த விலை உயர்வின் மூலம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கேரளா, தமிழ்நாடு
தென்னிந்தியப் பகுதிகளில் கேரளா, தமிழ்நாடு தவிரப் பிற 3 மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இதோடு மும்பையில் இன்றைய விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை 103.8 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
- சென்னை : 98.14 ரூபாய்
- டெல்லி : 96.93 ரூபாய்
- கொல்கத்தா : 96.84 ரூபாய்
- மும்பை : 103.08 ரூபாய்
- பெங்களூர் : 100.17 ரூபாய்
- ஹைதராபாத் : 100.74 ரூபாய்
- கோழிக்கோடு : 97.34 ரூபாய்
டீசல் விலை உயர்வு
இன்றைய டீசல் விலை நிலவரம்
- சென்னை : 92.31 ரூபாய்
- டெல்லி : 87.69 ரூபாய்
- கொல்கத்தா : 90.54 ரூபாய்
- மும்பை : 95.14 ரூபாய்
- பெங்களூர் : 92.97 ரூபாய்
- ஹைதராபாத் : 95.59 ரூபாய்
- கோழிக்கோடு : 92.73 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை
இதேவேளையில் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் அளவீட்டில் இருந்து 72.51 டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 70.51 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications