இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பெட்ரோல் விலை 29 பைசாவும், டீசல் விலை 35 பைசா வரையில் உயர்ந்து நாட்டின் தலைநகரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 29 பைசா உயர்ந்து 87.85 ரூபாயாகவும், டீசல் 35 பைசா உயர்ந்து 78.03 ரூபாயாகவும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
எரிபொருள் தேவை
இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக அதிகளவிலான கிட்டதட்ட 90 சதவீத கச்சா எண்ணெய்-யை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வரும் காரணத்தால் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
OPEC நாடுகள்
அந்த வகையில் இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய்யை OPEC அமைப்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. 2020ல் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருமான பாதிப்புகளைச் சமாளிக்க OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 61 டாலரைத் தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ஆனால் வியாழக்கிழமை முதல் OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆயினும் இந்திய சந்தையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. மேலும் OPEC எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி திங்கட்கிழமை எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
சென்னை விலை நிலவரம்
இந்நிலையில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.64 ரூபாயாகவும், டீசல் 85.32 ரூபாயாகவும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.44 ரூபாயாகவும், டீசல் 83.52 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 89.44 ரூபாயாகவும், டீசல் 81.96 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வரி விதிப்பு
பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகப்படியாக 91.09 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் 83.09 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரி விதிப்புகள் மாறுபடும் காரணத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுபடுகிறது. இதேவேளையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு அளவு புதிய உச்சத்தில் உள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications