இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொதுவகவே, கார்களின் எண்ணிக்கையை விட, இரு சக்கர வாகனங்கள் தான், அதிகம் புழக்கத்தில் இருக்கும்.
இந்திய இருசக்கர வாகனங்களில் பெரும்பாலும் பெட்ரோல் தான் பயன்படுத்துகிறோம்.
எனவே 2019-ல் பெட்ரோலின் விலை போக்கு எப்படி இருந்தது எனப் பார்ப்போம்.
பேசவில்லை
இதில் வருத்தமான விஷயம் என்ன என்றால், 2019-ம் ஆண்டிலேயே, இந்த டிசம்பர் 2019-ல் தான் பெட்ரோலின் விலை உச்சத்தில் இருக்கிறது. ஆனால் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போன்ற பிரச்னைகளுக்கு மக்கள் போராடிக் கொண்டு இருப்பதால், பெட்ரோல் விலை ஏற்றம் பெரிய அளவில் மக்களால் பேசப்படாமல் இருக்கிறது.
2019-ல் விலை ஏற்றம்
சென்னையில், ஜனவரி 01, 2019, அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 71.22 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த 2019-ம் ஆண்டிலேயே அதிகபட்ச விலை என்றால் அது டிசம்பர் 05, 2019 தான். அன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78.10 ரூபாய்க்கு விற்க்கப்பட்டது. ஆக 2019-ல் 9.66 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது பெட்ரோல்.
ஜனவரி டூ பிப்ரவரி
ஒரு லிட்டர் பெட்ரோல், ஜனவரி 05, 2019 அன்று ரூ.70.85-க்கும், ஜனவரி 22, 2019 அன்று ரூ.73.99-க்கும் விற்க்கப்பட்டது. இது தான் ஜனவரியின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், பிப்ரவரி 09, 2019 அன்று ரூ. 72.95 -க்கும், பிப்ரவரி 28, 2019 அன்று ரூ. 74.48 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் பிப்ரவரியின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
மார்ச் & ஏப்ரல்
ஒரு லிட்டர் பெட்ரோல், மார்ச் 01, 2019 அன்று ரூ. 74.57 -க்கும், மார்ச் 26, 2019 அன்று ரூ. 75.74 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் மார்ச் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், ஏப்ரல் 09, 2019 அன்று ரூ. 75.56 -க்கும், ஏப்ரல் 30, 2019 அன்று ரூ. 75.85 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் ஏப்ரல் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
மே & ஜூன்
ஒரு லிட்டர் பெட்ரோல், மே 01, 2019 அன்று ரூ. 75.90 -க்கும், மே 18, 2019 அன்று ரூ. 73.72 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் மே மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், ஜூன் 01, 2019 அன்று ரூ. 74.39 -க்கும், ஜூன் 17, 2019 அன்று ரூ. 72.64 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் ஜூன் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஜூலை & ஆகஸ்ட்
ஒரு லிட்டர் பெட்ரோல், ஜூலை 01, 2019 அன்று ரூ. 73.15 -க்கும், ஜூலை 23, 2019 அன்று ரூ. 76.24 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் ஜூலை மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், ஆகஸ்ட் 01, 2019 அன்று ரூ. 75.60 -க்கும், ஆகஸ்ட் 19, 2019 அன்று ரூ. 74.62 -க்கும் விற்க்கப்பட்டது. இது தான் ஆகஸ்ட் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
செப்டம்பர் & அக்டோபர்
ஒரு லிட்டர் பெட்ரோல், செப்டம்பர் 08, 2019 அன்று, 74.51 ரூபாய்க்கும், செப்டம்பர் 29, 2019 அன்று, 77.47 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது. இது தான் செப்டம்பர் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், அக்டோபர் 01, 2019 அன்று, 77.51 ரூபாய்க்கும், அக்டோபர் 29, 2019 அன்று, 75.72 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது. இது தான் அக்டோபர் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
நவம்பர் & டிசம்பர்
ஒரு லிட்டர் பெட்ரோல், நவம்பர் 05, 2019 அன்று, 75.45 ரூபாய்க்கும், நவம்பர் 30, 2019 அன்று, 77.83 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது. இது தான் நவம்பர் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல், டிசம்பர் 05, 2019 அன்று, 78.10 ரூபாய்க்கும், டிசம்பர் 17, 2019 அன்று, 77.58 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வருகிறது. இது தான் டிசம்பர் மாதத்தின் அதிகபட்ச & குறைந்தபட்ச விலை.


Click it and Unblock the Notifications