சென்னையில் பெட்ரோல் விலை 103 ரூபாயை நெருங்கியது..!

சர்வதசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தசரா மற்றும் நவராத்திரி பண்டிகைக்காக ஒரு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விடுப்பட்ட நிலையில், 3வது நாளாக தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் அளவீட்டை நெருங்கியுள்ளது.

3வது நாளாக உயர்வு

3வது நாளாக உயர்வு

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை சுமார் 35 பைசாவரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 3வது நாளாக தொடர்ந்து உயரும் காரணத்தால் இந்த 3 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை சுமார் 1 ரூபாய் அளவில் அதிகரித்து சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

சென்னை பெட்ரோல், டீசல் விலை

சென்னை பெட்ரோல், டீசல் விலை

இன்றைய அறிவிப்பின் மூலம் சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 30 பைசா வரையில் உயர்ந்து 102.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு லீட்டர் டீசல் விலை 33 பைசா அதிகரித்து 98.59 ரூபாயாக உள்ளது. இதேபோன்று விலை உயர்ந்தால் சென்னையில் அடுத்த 4 நாட்களில் டீசல் விலை 100-ஐ தாண்டும்.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 16)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 16)

சென்னை - 102.70 ரூபாய், டெல்லி - 105.49 ரூபாய், கொல்கத்தா - 106.10 ரூபாய், மும்பை - 111.43 ரூபாய், பெங்களூர் - 109.16 ரூபாய், ஹைதராபாத் - 109.73 ரூபாய், கோழிக்கோடு - 105.96 ரூபாய், போபால் - 114.09 ரூபாய், இந்தூர்- 114.14 ரூபாய்.

இன்றைய டீசல் விலை (Oct 16)

இன்றைய டீசல் விலை (Oct 16)

சென்னை - 98.59 ரூபாய், டெல்லி - 94.22 ரூபாய், கொல்கத்தா - 97.33 ரூபாய், மும்பை - 102.15 ரூபாய், பெங்களூர் - 100.00 ரூபாய், ஹைதராபாத் - 102.80 ரூபாய், கோழிக்கோடு - 99.66 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 1.19 சதவீதம் அதிகரித்து 82.28 டாலராக உயர்ந்துள்ளது, இதே போல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.02 சதவீதம் அதிகரித்து 84.86 டாலராக உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+