எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையா.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..!

கொரோனா, லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள வேலையிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.

ஒருபக்கம் வர்த்தகப் பாதிப்பால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருமானம் என்பது பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் இதைச் சமாளிக்க மத்திய அரசு எரிபொருள் விலையை அதிகரிப்பது மூலம் தொடர்ந்து அதிகளவிலான வரி வருமானத்தைப் பெற்று வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28-29 பைசாவும், ஒரு லீட்டர் டீசலுக்கு 26-28 பைசாவும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.47 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மே மாதத்தில் 17 முறை விலை உயர்வு

மே மாதத்தில் 17 முறை விலை உயர்வு

இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே 4ஆம் தேதி துவங்கி மே மாதத்தில் மட்டும் சுமார் 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை உயர்ந்தாலும், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரமும், உரிமையை மத்திய அரசு கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

சென்னை: 95.76 ரூபாய்
டெல்லி : 94.23 ரூபாய்
கொல்கத்தா : 94.25 ரூபாய்
மும்பை : 100.47 ரூபாய்
போபால் : 102.34 ரூபாய்
பெங்களூர் : 97.37 ரூபாய்
ஹைதராபாத் : 97.93 ரூபாய்
கோழிக்கோடு : 94.64 ரூபாய்

டீசல் விலை நிலவரம்

டீசல் விலை நிலவரம்

இன்றைய டீசல் விலை நிலவரம்

சென்னை: 89.90 ரூபாய்
டெல்லி : 85.15 ரூபாய்
கொல்கத்தா : 88.00 ரூபாய்
மும்பை : 92.45 ரூபாய்
போபால் : 93.65 ரூபாய்
பெங்களூர் : 90.27 ரூபாய்
ஹைதராபாத் : 92.83 ரூபாய்
கோழிக்கோடு : 90.05 ரூபாய்

சில பைசாக்கள் உயர்வதால் என்ன பிரச்சனை

சில பைசாக்கள் உயர்வதால் என்ன பிரச்சனை

சில பைசாக்கள் உயர்வதால் என்ன பிரச்சனை எனக் கேட்கும் அவருக்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு..

கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 ரூபாய், தற்போது மும்பை உட்படப் பல பகுதிகளில் 100 ரூபாய். இதேகாலகட்டத்தில் சமையல் எண்ணெய் விலை 110.94 ரூபாயில் இருந்து 172.57 ரூபாயாக உயர்வு, டீ பொடி 220.09 ரூபாயில் இருந்து 282.59 ரூபாயாக உயர்வு, துவரம் பருப்பு 93.78 ரூபாயில் இருந்து 107.84 ரூபாயாக உயர்வு..

பொருட்களின் விலை உயர்வு

பொருட்களின் விலை உயர்வு

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.. சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மூலம் பணக்காரர்கள் வாங்கும் கார் வரை அனைத்திலும் எரிபொருள் விலையின் தாக்கம் உள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூடப் பல முறை விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

கார்பரேட் நிறுவனங்கள்

கார்பரேட் நிறுவனங்கள்

இதேவேளையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகக் கார்பரேட் நிறுவனங்கள் வரிச் சலுகை, நிதியுதவி என அள்ளி வீசி வருகிறது. தராசு எப்போதும் ஓரே நிலையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+