இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை மேலும் கடுமையாகி வருகிறது.
நாடு முழுவதும் மாநில அரசுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருப்பதால் மக்கள் வெளியில் செல்லவில்லை என்றாலும் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் உணவுப் பொருட்களில் விலை போக்குவரத்து செலவுகளுக்கும் இருக்கும் காரணத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
14 முறை விலை உயர்வு
இந்த வாரத்தில் 2வது முறையாகவும், மாதத்தில் 14 முறையாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.
பயமுறுத்தும் மும்பை விலை
இதன் மூலம் இன்று மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 பைசா உயர்ந்து 99.94 ரூபாய்க்கும், டீசல் விலை 30 பைசா உயர்ந்து 91.87 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ப்ரீமியம் பெர்டோல் விலை 100 ரூபாயை தாண்டி பல நாட்கள் ஆன நிலையில், தற்போது சாதாரணப் பெட்ரோல் விலை இன்றைய விலை உயர்வின் மூலம் 100 ரூபாய் விலை அடைய வெறும் 6 பைசா குறைவாக உள்ளது.
சென்னை பெட்ரோல், டீசல் விலை
மும்பையைத் தொடர்ந்து டெல்லியில் பெட்ரோல் 93.68 ரூபாய்க்கும், டீசல் 84.61 ரூபாய்க்கும், சென்னையில் பெட்ரோல் 95.28 ரூபாய்க்கும், டீசல் 89.39 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் 93.72 ரூபாய்க்கும், டீசல் 87.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போபால் மாநிலம்
இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. போபால் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.77 ரூபாய்க்கும், டீசல் 93.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications