தினமும் உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை மத்திய அரசின் வரி குறைப்பிற்குப் பின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் விற்பனை நிறுவனங்கள் 12 நாட்களாக எவ்விதமான விலை மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் சப்ளை மற்றும் டிமாண்ட் பிரச்சனை பெரிய அளவில் மாறாத நிலையில் கச்சா எண்ணெய் விலையிலும் அதிகப்படியான மாற்றங்கள் நிலவி வருகிறது.
வரி வருமானம்
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டித்தரும் மிக முக்கியமான வர்த்தகப் பொருள் என்றால் அது பெட்ரோல், டீசல் தான். எனவே தான் இது நாள் வரையில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் இருக்கிறது.
விமான எரிபொருள் விலை
இந்தியாவில் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் விலையை விடவும் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமான எரிபொருள் விலை குறைவாக இருந்த நிலையில், மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்த்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடிவு செய்தது.
சிறப்புத் தீபாவளி அறிவிப்பு
இதைத் தொடர்ந்து மத்திய அரசு சிறப்புத் தீபாவளி அறிவிப்பாகப் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைத்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு மாநில அரசுகளையும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க அறிவுறுத்தியது.
25 மாநிலங்கள்
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்தது. இதனால் பல மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை சரியை துவங்கியது. இது சாமானிய மக்களின் பெரும் சுமையைக் குறைத்தது.
தமிழ்நாட்டில் எப்போது..?!
தமிழ்நாடு உட்பட, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இன்னும் குறைக்கப்படவில்லை.
தமிழக அரசு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அறிவிக்கும் முன்னரே ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கப்பட்டு உள்ளது மறக்க முடியாது.
வாய்ப்புக் குறைவு தான்
இதேபோல் பல மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தாத நிலையில், ஏன் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 10 மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்க வாய்ப்புகள் குறைவு தான்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பல முறை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications