இன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் இதற்கு அடுத்தாற்போல், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் என்றால் அதில் பெட்ரோல் டீசலும் கட்டாயம் இருக்கும்.
அதிலும் இந்த கொரோனாவுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. ஏனெனில் சமூக இடைவெளி, சுகாதாரம் இவற்றை கடைபிடிக்கும் விதமான, மக்கள் இரு சக்கர வாகனம், கார் என பலவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். .
இதனால் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அன்றாட தேவையாக மாறியுள்ள எரிபொருள்
ஆக இப்படியாக நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பெட்ரோல் டீசல் தேவையானது, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வரும் நிலையில், அதன் விலையானது தொடர்ந்து உச்சானிக் கொம்பை தொட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் 90 ரூபாயினையும் தாண்டியுள்ளது. போகிற போக்கினை பார்த்தால், விரைவில் சதம் அடித்து விடும் போல் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. ஆனால் தற்போதோ சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக தினசரி விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
அதிகரிக்கும் தேவை
கடந்த பல மாதங்களாகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வீட்டிலேயே முடங்கும் அபாயம் நிலவியது. தொழிற்சாலைகளும் முடங்கின. ஆனால் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தொழிற்சாலைகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதனால் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாகவே பெட்ரோல் விலை சீராக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை
மத்திய பிரததேசத்தின் தலைநகரான போபாலில் பெட்ரோல் விலை 90 ரூபாயினை தாண்டியுள்ளது. இதே டீசல் விலை அங்கு 80.10 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட இங்கு வாட் வரி அதிகம் என்பதால், இங்கு பெட்ரோல் விலை அதிகம். இங்கு பெட்ரோல் விலையில் 39 சதவீதமும், டீசல் விலையில் 28 சதவீதமும் வரியாக உள்ளது.
சென்னை நிலவரம் எப்படி
இதே சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி, 85.31 ரூபாயாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே போல டீசல் விலையும் மாற்றமின்றி 77.84 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
கொரோனாவின் காரணமாக முடங்கி போன சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் விலையானது ஒரு கட்டத்தில் மைனஸில் சென்றது. எனினும் தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணத்தால் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தேவை அதிகரிப்பு
பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபெக் நாடுகள் உற்பத்தியையும் குறைத்தன. இது விலையை அதிகரிக்கும் ஒரு காரணியாக தற்போது மாறியுள்ளது. ஏனெனில் கச்சா எண்ணெய் தேவையாக அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், உற்பத்தியானது குறைக்கப்பட்டுள்ளது. ஆக இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications