சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் பெட்ரோல், டீசல் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பல நகரங்களிலும் 100 ரூபாய்க்கும் மேலாக இருந்து வருகின்றது. இதே அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 127.30 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தற்போது கொரோனா காரணமாக இன்னும் பின்னடைவில் உள்ளது.
மீண்டும் விலை அதிகரிப்பு
இதற்கிடையில் அரசின் வருவாயினை பெருக்க வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இதனால் எரிபொருட்கள் விலையானது பாகிஸ்தானில் அடிக்கடி அதிகரிக்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல் டீசல் விலையானது அங்கு தாறுமாறான ஏற்றம் கண்டு வருகின்றது. தற்போது அங்கு பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 4 ரூபாயும், ஹை ஸ்பீடு டீசல் விலையானது லிட்டருக்கு 2 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையும் அதிகரிப்பு
இதே போல மண்ணெண்ணெய் விலையானது லிட்டருக்கு 7.05 ரூபாயும், லைட் டீசல் எண்ணெய் விலையானது 8.82 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே உள்ளூர் ஊடகங்களில் கடந்த செப்டம்பர் 15 அன்று இஸ்லாமாபாத்தில் பெட்ரோல் டீசல் விலையானது லிட்டருக்கு 5 - 6 ரூபாய் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போதைய எரிபொருள் விலை நிலவரம்
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 127.30 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது லிட்டருக்கு 122.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகினாது. இதே மண்ணெண்ணெய் விலையானது 99.31 ரூபாய்க்கும், லைட் டீசல் விலை 99.51 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்படுவதாக டான் அறிக்கைகள் கூறுகின்றன.
என்ன காரணம்
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் நிதி துறையானது, எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறைய் ஆணையம் (ஓக்ரா), கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் கருத்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது குறித்து, பரிந்துரைக்கு எதிராக, நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலை உயர்வை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களின் சுமையை குறைத்துள்ளதாகவும் டான் அறிக்கைகள் கூறுகின்றது.
பாகிஸ்தானில் ஒரு ரூபாய் என்பது, இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு 0.43 ரூபாயாகும். ஆக அந்த மதிப்பில் பார்க்கும்போது இந்தியா மதிப்பில் பெட்ரோல் விலை 63.5 ரூபாயாகும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications