செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில், மும்பையில் வடாலாவின் மஹுலில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து தனியார் விநியோகஸ்தர்களின் டிரக்குகள் வெளியேற அனுமதிக்கப்படாததால், மும்பையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
கிட்டதட்ட இதே நிலைதான் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவுகிறது. ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் இருந்தும் மக்கள் பயத்தில் அதிகளவில் வாங்க குவிந்துள்ளனர்.

மும்பையில் உள்ள உணவகங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. பிபிசிஎல் ஆலையில் தனியார் விநியோகஸ்தர்களின் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் லோடு செய்யப்பட்டு அதன் வளாகத்திற்குள்ளேயே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் பிரபலமான சகினாகா மற்றும் மீரா சாலையில் உள்ள பெட்ரோல் பம்புகளில் பைக்குகளில் மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதேபோல் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள சில பெட்ரோல் பம்புகள் திங்கள்கிழமை முதல் செயல்படுவதை நிறுத்தியதாகப் பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தின் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட பாரதீய நியாயச் சன்ஹிதா சட்டத்தின் கீழ் hit-and-run வழக்குகளுக்கு ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டுச் சிறை தண்டனை வழங்குவதை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டத்தை டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் நடத்தி வருகின்றனர்.
இன்னும் நடைமுறைக்கு வராத இந்த விதிகள், வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற பாதிப்புகளை வழிவகுக்கும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்துக் காங்கிரஸ் கூறியது.
மகாராஷ்டிரா உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாடு மற்றும் அதன் தாக்கம் குறித்துக் கவலை தெரிவித்து மும்பை போலீஸ் கமிஷனர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தது.
இந்தப் பாதிப்புத் தற்போது ஒவ்வொரு மாநிலங்களாகப் பாதிக்கப்பட்டு வருகிறது, ஹைதராபாத், நாக்பூர் நகரங்களைத் தாண்டி, ஹிமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரிபொருள், எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

முதல்ல LPG சிலிண்டரை சரண்டர் செய்யவும்.. அரசின் உத்தரவால் அதிர்ச்சி.. யாருக்கெல்லாம் சிக்கல்..?!

சிலிண்டர் தட்டுப்பாடு: 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

விழி பிதுங்கி நிற்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்: ஈரான் போரால் பெட்ரோல் விற்பனையில் புது பிரச்சினை

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

மக்களே உஷார்! மார்ச் 31-க்குள் e-KYC முடிப்பது கட்டாயம்? ஆன்லைனில் எப்படி எளிதாக அப்டேட் செய்யலாம்?

இனி புதன்கிழமையும் லீவு; 15 லிட்டருக்கு மேல் பெட்ரோல் கிடைக்காது: ஈரான் போரால் ஸ்தம்பித்து போன இலங்கை



Click it and Unblock the Notifications