ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்காக புதிய மாற்றங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் சில மாற்றங்கள் புத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளன. EPFO அமைப்பால் வழங்கப்படும் திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF). இந்த திட்டத்திற்கு தொழிலாளி மற்றும் முதலாளி இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கு வட்டியும் வழங்கப்படும். இந்நிலையில் தனது உறுப்பினர்களுக்கு எளிமையாக கணக்கை நிர்வகிக்கும் பொருட்டு EPFO அமைப்பு 2025-ஆம் ஆண்டு முதல் 5 முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது.
EPFO உறுப்பினர்கள் அனைவரும் எளிதில் பணம் பெறுதல், PF பாஸ்புக் டவுன்லோட் செய்தல், போன்ற தங்கள் கணக்கின் விவரங்களை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க, இந்த புதிய விதிகளை EPFO அமைப்பு கொண்டு வரவுள்ளது.

ஏடிஎம்-இல் இருந்து PF பணத்தை எடுக்கும் வசதி: 2025-ஆம் ஆண்டு முதல் EPF உறுப்பினர்கள் ஏடிஎம்-இல் இருந்து தங்கள் பணத்தை எடுக்கலாம். அதற்காக EPFO அமைப்பு ஒரு ஏடிஎம் கார்டை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஏடிஎம் கார்டு மூலம் 2025 முதல் 2026-ஆம் நிதியாண்டில் எளிதாக பணம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் உறுப்பினர்கள் விரைவாக மற்றும் எளிதாக பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு பணம் எடுக்க ஊழியர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது இந்த அம்சம் வரவுள்ளது.
ஊழியர்களின் பங்களிப்பு வரம்பில் மாற்றம்: மற்றொரு முக்கிய மாற்றம் ஊழியர்களுக்கான EPF பங்களிப்பின் அதிகரிப்பாகும். தற்போது ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் வரை EPF கணக்கில் செலுத்துகின்றனர். ரூ.15000 அடிப்படை சம்பளத்திற்கு பதிலாக உங்கள் உண்மையான சம்பளத்தின் அடிப்படையில் இனி பங்களிப்பு செய்ய முடியும். இது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அதிக நிதியை குவித்து ஒவ்வொரு மாதமும் அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம்.
EPFO அமைப்பின் சிஸ்டம் அப்கிரேட்: EPFO அமைப்பு சிஸ்டத்தை அப்கிரேட் செய்து வருகிறது. இதன் மூலம் PF பணத்தை கோருபவர்கள் மற்றும் பயனாளிகள் என அனைவரும் மனித தலையீடின்றி தங்கள் சேவைகளை பெற உதவும். இந்த மேம்படுத்தல்களும் 2025-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EPFO அமைப்பின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டால் உறுப்பினர்கள் விரைவாக தங்கள் சேவைகளை பெறலாம்.
ஈக்விட்டியில் முதலீடு செய்யும் வசதி: EPFO அதன் உறுப்பினர்களை எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகளுக்கு (ETFs) அப்பால் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. EPFO அமைப்பு ஈக்விட்டி முதலீடுகளை அனுமதித்தால் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். அதோடு உறுப்பினர்களுக்கு தங்கள் போர்ட்போலியோவை பல்வகைப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஓய்வூதியத்தை திரும்ப பெரும் செயல்முறை எளிதாகிறது: EPFO அமைப்பு ஓய்வூதியதாரர்களுக்கு உதவிகரமான வகையில் சில மாற்றங்களைச் செய்யயிருக்கிறது. புதிய விதியின்படி ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவித சரிபார்ப்பு செயல்முறையும் இல்லாமல் நாட்டில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் தங்கள் ஓய்வூதிய நிதியை திரும்ப பெற முடியும். இந்த நடவடிக்கை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் உள்ள சிக்கலை சரி செய்வதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications