EPF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய செய்தி ஒன்றை மத்திய அரசு வெளியிட உள்ளது. மத்திய அரசு இந்த ஆண்டுக்கான ஈபிஎஃப் வட்டி விகிதத்தை விரைவில் உயர்த்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 8.25% ஆக இருந்த வட்டி இந்த ஆண்டு 0.10 சதவீதம் உயர்ந்தி 8.35% ஆக அறிவிக்கலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. இந்த உயர்வின் வாயிலாக மாத சம்பளக்காரர்கள் வைத்திருக்கும் பிஎப் கணக்கில் 35000 ரூபாய் அளவிலான தொகை கிடைக்க வழிவகை செய்கிறது.

வட்டி உயர்வு குறித்த முடிவை மத்திய கருவூல வாரியத்தின் (Central Board of Trustees) கூட்டத்தில் எடுக்கப்படும். மேலும் இந்த அறிவிப்பு ஹோலி பண்டிகைக்குப் பிறகு, மார்ச் மாத நடுப்பகுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. வட்டி உயர்த்தப்பட்டால், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 8 கோடி ஈபிஎஃப் உறுப்பினர்கள் நேரடியாக பயனடைவர். இதற்கு தனியாக விண்ணப்பிக்கவோ படிவம் நிரப்பவோ தேவையில்லை - தானாகவே 35000 ரூபாய் அளவிலான தொகை கணக்கில் சேர்க்கப்படும்.
உங்கள் ஈபிஎஃப் கணக்கில் ரூ.4 லட்சம் அளவிலான தொகை இருப்பு இருந்தால், 8.35% வட்டியில் சுமார் ரூ.35,000 வரை வட்டி கிடைக்கும். ரூ.5 லட்சம் இருப்பில் இருந்தால் சுமார் ரூ.43,000 வரை வரலாம். இந்த வட்டி உங்கள் மொத்த இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படும். மத்திய அரசு வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட்டால், வட்டி தொகை ஜூன் மாதத்திற்குள் கணக்கில் சேர்க்கப்படும். அப்போது உங்கள் ஈபிஎஃப் பாஸ்புக்கில் புதுப்பிக்கப்பட்ட தொகையை பார்க்கலாம்.
உங்கள் ஈபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
இரண்டு எளிய வழிகள் உள்ளன.
முதலாவதாக, EPFO இணையதளம் சென்று உங்கள் UAN எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு "Member Passbook" என்பதை கிளிக் செய்யலாம்.
இரண்டாவதாக, இணையம் இல்லாதவர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து "EPFOHO UAN ENG" என்று SMS அனுப்பினால் 7738299899-க்கு உங்கள் இருப்பு விவரங்கள் வரும்.
இந்த வட்டி உயர்வு ஊழியர்களின் நீண்டகால சேமிப்புக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதால், ஊழியர்கள் தங்கள் ஈபிஎஃப் கணக்கை ஜூன் மாதத்திற்கு பின்பு செக் செய்வது நல்லது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications