பணி புரியும் பெரும்பாலானோர் PF கணக்கு வைத்திருப்பீர்கள். இந்த கணக்கில் பணியாளர் தன் சம்பளத்தில் 12 சதவீதத்தை மாதம் மாதம் டெபாசிட் செய்ய வேண்டும். அதே அளவுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தரப்பிலும் பங்களிப்பு செய்யப்படும். தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா? இல்லையா? என்ற கேள்விகள் பலருக்கும் வரலாம். உங்களுக்கு இது போன்ற குழப்பம் ஏற்பட்டால் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிட்டதா என்பதை எளிதாக ஆன்லைனில் கண்டுபிடிக்கலாம்.
EPF திட்டத்திற்கு 8.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. EPF திட்டத்திற்கு பங்களிப்பு செய்யப்படும் தொகையில், 8.33% EPS-க்கும், 3.67% EPF-க்கும் செலுத்தப்படும். சில நேரங்களில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு விட்டு கணக்கில் வராமல் இருக்கும். இதுபோன்ற சூழலில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்ததை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் UAN நம்பர் வழங்கப்பட்டிருக்கும். இந்த நம்பரை வைத்து எளிதாக PF கணக்கில் இருக்கும் பாலன்ஸ் தொகையை வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதற்கு கீழ்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டேப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டேப் 2: அடுத்ததாக "Our Services" என்ற செக்சனுக்கு சென்று "For Employees" என்பதை கிளிக் செய்யவும். பிறகு மெம்பர் பாஸ்புக் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப் 3: தற்போது உங்களுடைய UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை வழங்கவும். நீங்கள் லாகின் செய்ததும் உங்களுடைய பாஸ்புக், PF தொகை, எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டது? என்பன போன்ற விவரங்களை அனைத்தும் காண்பிக்கப்படும்.
SMS மூலம் PF பேலன்ஸ்-ஐ பெறுவது எப்படி?: PF பேலன்ஸ்-ஐ SMS மூலம் தெரிந்துகொள்ள உங்கள் UAN நம்பர் தேவை. SMS மூலம் PF பேலன்ஸ்-ஐ தெரிந்துகொள்ள EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். நீங்கள் மெசேஜ் அனுப்பியவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு பிஎப் பேலன்ஸ் அனுப்பப்படும்.
மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ்-ஐ எப்படி சரிபார்ப்பது?: மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ்-ஐ சரிபார்க்கும் வசதியையும் EPFO அமைப்பு வழங்கியுள்ளது. இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF பேலன்ஸ் அனுப்பப்படும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications