கோடிக்கணக்கான இந்திய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வேலை செய்யும் நபரின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நிறுவனத்தில் நாம் வேலைக்கு செல்லும்போது நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையையும், நிறுவனம் சார்பாகவும் பிடித்து அதனை நம் பெயரில் ஒரு பிஎஃப் கணக்கினை தொடங்கி அதில் கிரெடிட் செய்வார்கள். நாம் பணி ஓய்வு பெறும் போது இந்த பிஎஃப் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இடைப்பட்ட காலத்திலும் அவசர தேவைக்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இதற்காகவே ஈபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நம் பிஎஃப் கணக்கில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் முழுவதும் பிஎஃப் கணக்கிலும் , நிறுவனம் செய்யும் பங்களிப்பில் ஒரு கணிசமான தொகை ஓய்வூதிய தொகையிலும் சென்று சேரும் . தற்போது இருக்கும் விதிமுறைப்படி ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் தொகையானது ஊழியர் சார்பிலும், மேலும் 12 சதவீதம் தொகையானது நிறுவனம் சார்பிலும் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் நிறுவனம் வரவு வைக்கும் தொகையில் 8.3 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கும், 3.67% இவ்வாறு நம்முடைய பிஎஃப் கணக்கிற்கும் சென்றுவிடும்.
நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ஆண்டுதோறும் அரசு 8.25% வட்டி வருமானத்தை வழங்குகிறது. அப்படி பார்த்தால் ஒரு நபர் மாதம் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஆகிய அனைத்தும் சேர்த்து 25 ,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய சம்பளத்தில் இதில் 12 சதவீதம் அதாவது மாதம் தோறும் 3,000 ரூபாய் பிஎஃப் கணக்கிற்கு செல்கிறது . அதேபோல நிறுவனம் சார்பில் இவர் பிஎஃப் கணக்கிற்கு 3.67% தொகை அதாவது 917 ரூபாய் செல்கிறது, மீதமுள்ள பணம் ஓய்வூதிய கணக்கிற்கு சென்றுவிடும்.
இப்படி பார்த்தால் அந்த நபரின் பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் 3917 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இவர் பங்களிப்பு செய்யும் தொகை 47,004 ரூபாய். இந்த பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் 8.25% வட்டி வழங்குகிறது .கூட்டுவட்டி முறையில் இவருடைய பணம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்படி பார்க்கும்போது 10 ஆண்டுகளில் இவருடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகை 7.45 லட்சம் ரூபாய்.
அதுவே 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக இதே பணம் வரவு வைக்கப்பட்டால் இது 14.08 லட்சமாக உயர்ந்திருக்கும், 20 ஆண்டுகளில் இவருடைய பிஎஃப் தொகை 23.50 லட்சமாக அதிகரித்திருக்கும். இது 20 ஆண்டுகளுக்குமே 25000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் செய்த கணக்கு. இந்த பணத்தை ஓய்வு வயது எட்டும் வரை எடுக்காமலே விட்டு வைத்தால் பெரிய தொகையாக வந்து சேரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

