இந்தியாவில் பணி புரியும் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் பணிபுரியும் போதே தங்களுக்கு தேவைப்படும் நிதியை உருவாக்க உதவி செய்யும் வகையிலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்பட்டு வருகிறது. EPFO அமைப்பால் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் "ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம்" (EPF). இந்த திட்டத்தில் பணிபுரியும் போதே ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்.
அதன் பிறகு தேவைப்படும் நேரத்தில் இந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே வேலை செய்யும் போது மாதம் மதம் குறிப்பிட்ட தொகையை பங்களிப்பதன் மூலம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு யாரையும் சார்ந்திருக்காமல் அந்த பணத்தை பயன்படுத்தி பலனடையலாம்.

இந்நிலையில் ஊழியர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுப்பதற்கான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இதற்காக அண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு "EPFO 3.0" என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் PF கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும்.
EPFO 3.0 திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?: EPFO 3.0 திட்டம் 2025-ஆம் ஆண்டின் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு நீங்கள் EPF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க முடியும். முன்னதாக பகுதி அளவு திரும்ப பெறுவதற்கே விண்ணப்பம் செய்ய வேண்டியிருந்தது.
அதோடு PF கணக்கை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு ஊழியர் ஏடிஎம்மில் இருந்து பிஎப் பணத்தை எடுக்க முடியும். பணத்தை ஊழியர்கள் எளிதாக எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும் வகையில் ஒரு கார்டை EPFO அமைப்பு வழங்கயிருக்கிறது. இந்தக் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதனால் விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது, அதிகாரிகள் வழங்கும் ஒப்புதலுக்காக காத்திருப்பது போன்ற அனைத்து செயல் முறையும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரவிருக்கும் EPFO 3.0 திட்டத்தின் மூலம் பல்வேறு நல்ல மாற்றங்கள் வர இருக்கின்றன. இதன் மூலம் பணம் எடுக்கும் செயல்முறையிலிருந்து பிற செயல்முறை வரை அனைத்தும் எளிதாகும் என்று கூறப்படுகிறது. ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது முதல் சேமிப்பை மொத்தமாக ஓய்வூதிய தொகையாக மாற்றுவது வரை பல்வேறு மாற்றங்கள் இதில் அடங்கும். அதேபோல PF தொகை பிடித்தம் செய்யப்படும் வரம்பும் அதிகரிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications